மரபணு மாற்றப்பட்ட பருத்தியை பற்றிய சர்ச்சைகள் பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம்.
ஒரு பக்கம் மரபணு மாற்றப்பட்ட பருத்தி மூலம் ரசாயன பூச்சி கொல்லி உபயோகம் குறைந்து, விவசாயிகள் லாபம் அதிகம் என்ற வாதம்.இன்னொரு பக்கம் விதர்பாவில் அடிக்கடி நடக்கும் தற்கொலைகள் மரபணு மாற்றப்பட்ட பருத்தி மூலம் வரும் நஷ்டமே காரணம் என்று
இந்த சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி வைக்க இங்கிலாந்தில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் விதர்பாவில் ஆராய்ச்சி செய்து Nature என்ற ஆராய்ச்சி பத்திரிகையில் வெளியுட்டுள்ள கட்டுரையில் இருந்து சில முக்கிய உண்மைகள்:
- சிறிய அளவில் நிலம் மற்றும் மழை நீர் பாசனம் செய்யும் விவசாயிகளுக்கு மரபணு மாற்றப்பட்ட பருத்தி மற்றும் பாரம்பரிய நாட்டு பருத்தியில் மூலம் வரும் வருமானமும் லாபமும் கிட்டத்தட்ட ஒன்று தான்.
- ஆனால் மரபணு மாற்றப்பட்ட பருத்தி சாகுபடி செய்வோர், விதைகள், பூச்சி கொல்லிகள், உரங்களுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டி உள்ளது. இதனால்,அவர்களின் லாபம் குறைகிறது. மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளின் விலை நாட்டு பருத்தி விதையை விட 10 மடங்கு அதிகம்
- இந்த முடிவு இந்தியாவில் குறிப்பாக விதர்பா, குஜராத் போன்ற மாநிலங்களில் பெரிய விவாதத்தை உருவாக போகிறது. இந்தியாவில் 2002 ஆண்டில் அறிமுக படுத்த பட்ட மரபணு மாற்றப்பட்ட பருத்தி இப்போது 90% நிலங்களில் பயிர் இட படுகிறது.
- மரபணு மாற்றப்பட்ட பருத்தி பயிர்கள் அதிகம் நீர் தேவை படுகிறது. பாசனம் நன்றாக உள்ள இடங்களில் மரபணு மாற்றப்பட்ட பருத்தி நல்ல மகசூல் தருகிறது. ஆனால் அதிகம் செலவு செய்வதால் அது லாபத்தை குறைக்கிறது.
- ஆகையால் உங்களுக்கு மானாவாரி, மற்றும் சிறிய அளவு வயல் இருந்தால்,நாட்டு பருத்தியை சாகுபடி செய்வது நலம். செலவு குறைவாக இருப்பதால், குறைந்த பட்ச லாபமாவது கிடைக்கும்!
இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட Dr Carla Romeu-Dalmau அவர்கள
மேலும் விவரம் அறிய:
The cost of native and GM cotton crops – article by Dr Carla Romeu-Dalmau
(Article abstract: Researchers at the University of Oxford, United Kingdom, are reporting that native cotton in India can generate similar profits to genetically modified (GM) cotton when both are grown without irrigation. The researchers compared the economic impact of growing native Asiatic cotton with that of growing American Bt cotton, which has been engineered to make the crop resistant to insect pests. The team found that farmers in the Indian state of Maharashtra spent more money to produce Bt cotton than native cotton, even though the Bt cotton resulted in higher yields. The authors did find that growing GM cotton under rain-fed conditions had similar economic benefits to GM cotton grown using irrigation. Bt cotton with irrigation had higher yields, but cost more, which ate into profits. Overall, the authors suggest that farmers should consider a range of factors, including expenses and water availability, when decided which crop to plant. )
In rain-fed areas, Indian cotton crop gives similar profit as BT cotton: Research (DNA)
பசுமை தமிழகம் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை பற்றிய தகவல்கள்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Thanks for letting us know this simple truth