கணேஷ், மகாராஷ்டிரா மாநிலம் யாவட்டமல் மாவட்டத்தில் விவசாயி. தன்னுடைய பருத்தி தோட்டத்தில் காட்டுகிறார் – “எந்த ஒரு பருத்தி காயையும் பிரித்து மாறுங்கள் – அவை எல்லாம் பூச்சிகளால் அழித்து இருப்பதை”..
அவருடைய 4 ஏக்கர் நிலத்தில் மரபணு மாற்றப்பட்ட பருத்தியின் தோல்வியை காண முடிகிறது. அவருடைய நிலத்தில் மொத்தமே 200கிலோ பருத்தி மட்டுமே பிங்க் போல் புழு தாக்குதல் இருந்து தப்பித்து உள்ளது. இது கடந்த ஆண்டில் விளைந்ததில் 5% மட்டுமே
அவர் அவரின் நஷ்டத்தை ரூ 2 லட்சம் என்று அனுமானிக்கிறார்
மஹாராஷ்ட்ரா, பருத்தியில் இந்தியாவில் அதிகம் பயிரிட படுகிறது. லட்சக்கணக்கான கணேஷ் போன்ற விவசயிகள் இவரை போல் இந்த வருடம் மிக பெரிய நாசத்தை எதிர் கொள்ளுகிறார்கள்.
இந்த சோகத்தின் பின் மரபணு மாற்றப்பட்ட தொழிற்நுட்பத்தின் போலி வாக்குறுதிகள் பொதிந்து உள்ளன
இந்த கதையை தெரிந்து கொள்ள சிறிது நாம் rewind செய்ய வேண்டும்.மான்சான்டோ என்ற மரபணு மாற்றப்பட்ட தொழிற்நுட்பம் கொண்ட பருத்தி 2002 வந்தது. காங்கிரஸ் ஆட்சி இதை அனுமதித்தது. முதலில் என்ற Bollgard I (BG-I) விதையும், 2006இல் Bollgard II (BG-II) என்ற விதையும் வந்தது.
இந்த மரபணு மாற்றப்பட்ட தொழிற்நுட்பதின் வாக்குறுதி என்ன -என்றால் ” இவை அமெரிக்க மற்றும் பிங்க் போல் புழு தாக்குதல் (American Boll worm, Pink Boll worm) இருந்து முற்றிலும் விடுதலை என்பதே”.
பருத்திக்கு அதிகம் பூச்சி தாக்குதல் இயற்கை. இதனால் விவசாயிகள் அதிகம் பூச்சி மருந்தை பயன் படுத்தினர். இந்த தொழிற் நுட்பத்தால் பூச்சி மருந்து செலவு குறையும் என்று நம்பினர். ஆரம்பத்தில் இது உண்மையாக இருந்தது. இதனால், கடந்த 10 ஆண்டுகளில் மரபணு மாற்றப்பட்ட பருத்தி 95% சதவீதம இந்தியாவில் ஊடுருவியது..
இந்த தொழிற்நுட்பத்தை பற்றிய சர்ச்சைகள் முதலில் இருந்தே வந்து உள்ளன. இவற்றை இங்கே படிக்கலாம். அதாவது, மற்றொரு உயிரினத்தில் இருந்து மரபணுக்களை சேர்த்து உருவாக்கப்பட்ட இந்த பருத்தி, பூச்சிகளுக்கு மட்டுமே விஷம்.
மரபணு மாற்றப்பட்ட பருத்தி எந்த வாக்குறுதியை சொல்லி சந்தையில் 95% பிடித்ததோ, அது இப்போது இழந்து விட்டது. இப்போது அதே பூச்சிகளால் பருத்தி தாக்குதல் அடைந்து உள்ளது
இதற்கு மான்சான்டோ கூறும் பதில் என்ன ? ” பூச்சிகளில் எதிரிப்பு வருவது இயற்கையே!”
மரபணு மாற்றப்பட்ட தொழிற்நுட்பம் இயற்கையோடு விளையாடும் ஒரு தொழிற்நுட்பம். நாமும் கடவுள் என்று விளையாடும் விளையாட்டு. vநாம் இப்படி விஷமம் செய்தால், இயற்கை அதிவேகமாக இந்த பூச்சிகளுக்கு விஷ முறிப்பு தொழிற்நுட்பத்தை கொடுத்து விட்டது! முன்பு வேலை செய்த பூச்சி மருந்துகளும் வேலை செய்ய முடியவில்ல! கடைசியாக, அதிகம் விலை கொடுத்து விதைகளை வாங்கி, இப்போது பூச்சி தாக்குதலால் பூச்சி மருந்து செலவும் சேர்ந்து விட்டது.v
இப்படி வீண் வக்ர தொழிற்நுட்பத்தை விட்டு விட்டு நாட்டு பருத்தி விளைவித்து பயன் பெறுவது நல்லது. விவசாயிகள் அதிக லாபம் எடுக்காவிட்டால், இப்படி நஷ்டம் எடுக்க மாட்டார்கள்
மேலும் தெரிந்து கொள்ள:
- These two issues could put the brakes on the Bt cotton story
- Is GM cotton a success in India or not?
- Claims on Bt cotton need to be probed: Panel
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
One thought on “மரபணு மாற்றப்பட்ட பருத்தியின் பொய்த்த வாக்குறுதி”