மரபணு மாற்றப்பட்ட மீன்!

மரபணு மாற்றப்பட்ட பயிர்களை பற்றிய சச்சரவுகளே தீர்ப்பு வரவில்லை. அதற்கு முன்பு அமெரிக்காவில் இப்போது மரபணு மாற்றப்பட்ட மிருகங்களை உருவாக ஆரம்பித்து விட்டார்கள்.

சாலமன் (Salmon) என்ற மீன் அமெரிக்காவில் அதிகம் உண்ணபடுகிறது. அட்லாண்டிக் சால்மன் எனப்படும் இந்த மீன் வகை ஒரு காலத்தில் அட்லாண்டிக் மகாகடல் முழுவதும்  .பரவி இருந்தது.

அளவுக்கு மீறி இந்த மீன்களை மீன் பிடித்தால் இவை இப்போது அழிந்து வருகின்றன. அதனால் captive வழியாக மீன்களை வளர்த்து அவற்றை விற்க  ஆரம்பித்தார்கள். நம் ஊரில் ப்ராய்லர் கோழி வளர்ப்பது போல்.

இந்த மீன்கள் முழு அளவுக்கு வளர 36 மாதம் ஆகும். எதிலும் பேராசை என வேலை செய்யும் மனிதன் எப்படி சீக்கிரம் இந்த மீனை வளர்த்து பணம் செய்ய வழி கண்டு பிடித்து விட்டான்.

மரபணு மாற்றம் செய்து 36 மாதத்தில் வளரும் மீன் 18 மாதங்களிலே வளர்ந்து விடுகிறது. இயற்கையில் உள்ள சால்மன் ஒரு வருடத்தில் சில மாதங்களே வளரும், ஆனால் Ocean Pout Eel ஈல் என்ற மற்றொரு மீனில் இருந்து மரபணுவை சேர்த்து (கட் அண்ட் பேஸ்ட்) செய்து இந்த மீனை உருவாக்கி உள்ளனர்.

மரபணு மாற்றப்பட்ட சால்மன் மீன்  Photo courtesy: New York Times
மரபணு மாற்றப்பட்ட சால்மன் மீன் Photo courtesy: New York Times

 

 

 

 

 

 

 

 

 

 
அமெரிக்க Food and Drug Administration இந்த மீன்கள் எந்த விதமான கெடுதலும் இல்லை என்றும் இவற்றை உண்ணலாம் என்று அறிவித்து விட்டது.

இப்படி இயற்கை விதிகளை மாற்றி ஒரு உயிர் இனத்தில் இருந்து மற்றொரு இனத்தை மரபணு அளவில் சேர்த்து மனிதன் இப்போது கடவுள் விளையாட்டு ஆரம்பித்து உள்ளான். இதன் நீண்ட நாள் தாக்கங்கள் (Long term implications) யாருக்கும் தெரியாது. இயற்கை evolution பரிமாண வளர்ச்சி மூலம் பல லட்சம் வருடங்கள் மூலம் உண்டான உயிர் இனங்கள் இனி மனிதன் லாபிலேயே உண்டாகலாம்.

இந்த விபரீத விளையாட்டு எங்கே போய் முடியுமோ?

மேலும் அறிய நியூ யார்க் டைம்ஸ் படிக்கலாம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *