பாராளுமன்றத்தின் விவசாயத்தை பற்றிய குழு இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட உணவு தானியங்களை (genetically modified Bt seeds) தடை செய்ய பரிந்துரை செய்து உள்ளது
இந்தியாவில் இப்போது மரபணு மாற்றப்பட்ட பருத்தி (Bt cotton) பயிரிட படுகிறது.
2010 வருடம் மகாராஷ்டிரா சேர்ந்த என்ற Mayhco நிறுவனம் மரபணு மாற்றப்பட்ட கத்திரியை (Bt Brinjal) அறிமுகம் செய்ய மத்ய அரசை கேட்டது.
இதற்கு மக்களிடையும் விஞானிகள் இடம் இருந்தும் பெரும் எதிர்ப்பு தோன்றியது.
அப்போது சுற்று சூழல் மந்திரியான திரு ஜெய் ராம் ரமேஷ் மரபணு மாற்றப்படும் உணவு பயிர்களுக்கு கால வரையற்ற தடை விகித்தார்
அப்போது பாராளுமன்றத்தில் எல்லா கட்சிகளையும் சார்ந்த பேர் கொண்ட Parliamentary standing committee on agriculture குழு இந்த விஷயத்தை விவாதத்திற்கு எடுத்து கொண்டது.
இரண்டரை ஆண்டு காலம் விவாதித்து 491 பக்கம் கொண்ட ஒரு அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்து உள்ளது.
இதின் முக்கிய சாராம்சம்கள்:
– இந்தியாவில் மரபணு மாற்ற பட்ட உணவு பயிர்கள் தடை செய்ய வேண்டும்
– மரபணு மாற்றப்பட்ட கத்திரி சரியாக பரிசோதனை செய்யாமல் ரிலீஸ் செய்தது மாபெரும் தவறு
– Bt தொழிற்நுட்பம் பனாட்டு விதை நிறுவனங்களை மட்டும் நன்மை செய்கின்றன. விவசாயிகள் எந்த பயனும் பெறுவதில்லை
– இந்தியாவில் 70% சதவீதம் சிறிய விவசாயிகள். இவர்கள் மரபணு மாற்ற பட்ட விதைகளை பயன் படுத்தி கடனில் மூழ்கி உள்ளனர்
– இந்த தொழிற்நுட்பம் நெறிமுறை (ethical questions) மீறியதாக தெரிகிறது
இந்த பாராளுமன்ற குழுவில் காங்கிரஸ், பாரதீய ஜனதா, கம்யூனிஸ்ட் என்று எல்லா கட்சி உறிப்பினர்களும் ஒரு மனதாக இந்த அறிக்கயை சமர்ப்பித்து இருப்பது கவனிக்க தக்கது.
என்ன செய்ய போகிறார் மன மோகன் சிங்?
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
3 thoughts on “மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய் – பாராளுமன்ற குழு”