மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை பயன்பாட்டிற்கு பயிரிட அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை, வர்த்தக ரீதியிலான பயன்பாட்டிற்கு பயிரிட அனுமதி கோரி, மரபணு பயிர்கள் குறித்த ஆய்வு மையத்தின் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. இதற்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, விவசாயிகள், விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடமும், மத்திய அரசு ஆலோசனை கேட்டது.

இந்நிலையில், ஜி.இ.ஏ.சி., எனப்படும், மரபணு பொறியியல் மதிப்பீட்டு குழு கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இதில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயன்பாட்டிற்கு ஆதரவான அறிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
இந்த அறிக்கைகள், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இறுதி முடிவை மத்திய அரசு எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்