மரபணு மாற்று பயிர்களுக்கு தமிழகத்தில் அனுமதியில்லை!'

”தமிழகத்தில், மரபணு மாற்று பயிர்களுக்கு அனுமதி வழங்கப்படாது. இந்த விஷயத்தில், விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கவலையடைய வேண்டாம்,” என, வேளாண் அமைச்சர், கிருஷ்ணமூர்த்தி கூறினார்.சட்டசபையில் நேற்று, வேளாண்துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதம்:

தே.மு.தி.க., சேகர்:

  • அரிசி, கொண்டைக்கடலை, கடுகு உள்ளிட்ட, 15 வகை பயிர்களுக்கு மரபணு மாற்று வயல்வெளி ஆய்வுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
  • அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளே, இந்த ஆய்வுக்கு அனுமதி வழங்கி, வணிக பொருளாதார இழப்பை சந்தித்துள்ளன.இதற்கு, அனுமதி வழங்காமல் இருப்பதே புத்திசாலித்தனம். இவ்விஷயத்தில், நமது மாநிலத்தின் நிலைப்பாடு என்ன என்பதை அறிய விவசாயிகள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.

அமைச்சர் கிருஷ்ணமூர்த்தி:

  • மரபணு மாற்று பயிர் வயல்வெளி ஆய்வுக்கு அனுமதிக்ககூடாது என்றுகூறி, கடந்த 2005ல், சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
  • கோர்ட்டால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, இடைக்கால மற்றும் இறுதி அறிக்கைகளை தாக்கல் செய்தது.
  • மத்திய அரசின், மரபணுமாற்று தொழில்நுட்ப அனுமதிக்குழு, கடந்த 2012 – -13ல், வயல்வெளி ஆய்வுக்கு அனுமதி வழங்கியது. இக்குழுவின் கூட்டம், கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடந்தது.
  • ஏற்கனவே, வழங்கப்பட்டு காலாவதியான வயல்வெளி ஆய்வை மீண்டும் மேற்கொள்ள இக்குழு பரிந்துரைத்தது.
  • வரும்காலத்தில், மேற்கொள்ளவுள்ள ஆய்வுக்கும் அனுமதி வழங்கியுள்ளது.
  • கடந்த, 2011 ஆக., மாதம், சட்டசபையில், 110வது விதியின் கீழ் பேசிய முதல்வர் ஜெயலலிதா, ‘மரபணு மாற்று பருத்தி சாகுபடிக்கு அனுமதியில்லை’ என, அறிவித்தார்.
  • மரபணு மாற்று வயல்வெளி ஆய்வுமேற்கொள்ள அந்தந்த மாநிலத்தில், தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும்.
  • தமிழகத்தில், மரபணு மாற்று பயிர்களுக்கு அனுமதி வழங்கப்படாது. இவ்விஷயத்தில், விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கவலையடைய வேண்டாம். இவ்வாறு, விவாதம் நடந்தது

 

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *