மரபணு மாற்றப்பட்ட பயிர் பற்றிய சர்ச்சைகள் முடிவே இல்லை! இதோ ஒரு புதிய திருப்பம்….
புதுடில்லி:மரபணு மாற்று பயிர்கள் குறித்து அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என மத்திய சுற்றுபுறசூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்துள்ளார்.
இந்தியாவில் 15 வகையான(சில குறிப்பிட்ட நெல், கத்தரி, பருத்தி உள்பட) மரபணு மாற்று பயிர்களை சோதனை முறையில் பயிர் செய்ய உயிரிதொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையமான மரபணு பொறியியல் அனுமதிக்குழு (Genetic Engineering Approval Committee) அனுமதி அளித்து இருந்தது.
இதற்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினரும், விவசாய அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.இப்போது இதற்கு ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் துணை அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ்.சுடன் தொடர்புடைய 2 அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.சுதேசி ஜக்ரான் மஞ்ச் மற்றும் பாரதீய விவசாய சங்கத்தினர் இதுதொடர்பாக நேற்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்தனர்.
விவசாய நிலத்துக்கும், மனிதர்களின் நலனுக்கும் கேடு விளைவிக்கும் மரபணு மாற்று பயிர்கள் பற்றிய அறிவியல்பூர்வமான ஆய்வுகளை நடத்தாமல் அவற்றை அனுமதிக்கக்கூடாது. ஒருமுறை அதனை அனுமதித்துவிட்டால் பின்னர் அதில் இருந்து மீளமுடியாது என்பது எடுத்து கூறினர்.
அப்போது மத்திய அமைச்சர் ஜவடேகர், அவசரமாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என விவசாய சங்கத்தினரிடம் தெரிவித்தார்.
மரபணு பயிர்கள் மூலம் உற்பத்தி பெருக்கிவிடலாம் என்பதற்கு எந்தவித விஞ்ஞானபூர்வமான ஆதாரங்களும் இல்லை.இது நாட்டின் மிகமுக்கியமான உணவு பாதுகாப்பு பிரச்சினை சம்பந்தப்பட்டது. எனவே இந்திய மக்களின் நலம், உணவு பாதுகாப்பு, விவசாய நிலம், நாட்டு நலன் கருதி மரபணு மாற்று பயிர்களை சோதனை முறையில் பயிரிட அனுமதிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் அவர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் கேட்டபோது, உயிரிதொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம் இந்த முடிவை எடுத்தது. ஆனால் அரசு இதுவரை அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சோதனை முறையான இந்த பிரச்சினை குறித்து அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அரசு அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் உறுதியாக எடுக்காது என்றார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Sir, pasumai tamizhagam tag internet illamal free aplication aaga irunthal innum best-aaga irukum….thanks…