மரபணு மாற்ற பட்ட வறட்சி எதிர்ப்பு மக்கா சோளம்

மரபணு மாற்ற படும் விதைகளுக்கு விஞானிகள் கூறும் ஒரு காரணம் என்ன தெரியுமா? உலகளவில் ஏற்பட்டு கொண்டு இருக்கும் புவி வெப்பமடைதல் (Global warming) காரணமாக மழை பெய்வது குறையும்.
அதனால்,  நீர் குறைந்து எடுத்து கொள்ளும் பண்பு உடைய (Drought resistant) பயிர்கள் தேவை
இதன் முதன் படியாக, மொன்சாண்டோ நிறுவனம் இப்போது நீர் குறைந்து எடுத்து கொள்ளும், வறட்சியை தாங்கும் மக்கா சோளம் (Drought resistant genetically modified corn) உருவாக்கி உள்ளது. ஜெர்மனி சேர்ந்த BASF என்ற நிறுவனத்துடன் சேர்ந்து இந்த விதையை உருவாக்கி உள்ளது.
இந்த பயிரை பயிரிட அமெரிக்க ஒபாமா அரசு அனுமதி கொடுத்து விட்டது.
இந்த பயிரை எப்படி உருவாக்கி உள்ளனர் தெரியுமா? மண்ணில் உள்ள ஒரு  Bacillus subtilis பக்டேரியாவில் இருந்து எடுக்க பட்ட DNA மக்கா சோளம் DNA உடன்  சேர்க்க பட்டு உருவாக பட்டு உள்ளது.

இது வரை மரபணு மாற்றும் விதை மூலமாக  பூச்சி மருந்து உபயோகம்  குறையும் என்று சொல்ல பட்டது. இப்போது மொன்சாண்டோ வேறு காரணங்கள் கூறியும் புது  விதைகளை உருவாக்க ஆரம்பித்து விட்டது.

இயற்கையுடன் விளையாடும் இந்த ஆட்டம் எங்கே தான் போய் நிற்குமோ?


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *