மரபணு மாற்றப்பட்ட விதைகளை பற்றிய சர்ச்சைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்கின்றன
சென்ற மாதம், மதிய பாராளுமன்ற குழு, மரபணு மாற்றப்பட்ட விதைகளையும் தொழிர்நுட்பதையும் தடை செய்ய
பரிந்துரை செய்தது. ஆனால் பிரதம மந்திரியின் விஞான ஆலோசனை குழு இதற்கு மாறாக தொழிர்நுட்பதை வேகமாக பரப்ப பரிந்துரை செய்தது
இப்போது, இன்னொரு திருப்பமாக, சுப்ரீம் கோர்ட்டில் மூலமாக வந்துள்ளது.
சில வருடங்களுக்கு முன் மரபணு மாற்றப்பட்ட தொழிர்நுட்பதை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கு தலைமை நீதிபதி கபாடியா
முன் விசாரணைக்கு வந்தது
அவர், மரபணு மாற்றப்பட்ட விதைகளை நிலத்தில் பரிசோதனை செய்ய (open field trials) அனுமதிக்கலாமா என்று கூற ஐந்து விஞானிகள் கொண்ட ஒரு குழு அமைத்தார். மூன்று மாதங்களில் இடைகால அறிக்கையை கொடுக்க பணித்தார்
இந்த குழுவின் இடைகால அறிக்கை மரபணு மாற்றப்பட்ட விதைகளின் கம்பனிகளுக்கு எமனாக வந்து உள்ளது.
இந்த குழுவின் இடைகால அறிக்கையின் முக்கிய பரிந்துரைகள்:
- நீண்ட கால தாக்கங்களை கொடுக்க வல்ல (long term implications) சக்தி வாய்ந்த தொழிர்நுட்பதை நன்றாக புரிந்து கொண்டே அனுமதிக்க வேண்டும்
- மக்களின் உடல்நலம் பற்றிய கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதில் அளிக்க வேண்டும் (safety)
- மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு ஒப்புதல் கொடுக்கும் ஒப்புதல் குழுவில் (GAEC) முரண்பாடுகள் இருக்கின்றன. ஒப்புதல் கொடுக்கும் குழுவில் இருப்பவர்கள் விதை கம்பனிகளுடன் உறவு வைத்து உள்ளனர். இந்த Conflict of interest நீக்க பட வேண்டும்
- தீவிரமான தாக்கங்களை உண்டாக்கும் சக்தி கொண்ட இந்த தொழிற்நுட்பம், உணவு வகை பயிர்களுக்கு இன்னும் பத்து வருடம் தடை (Moratorium) செய்ய வேண்டும்.
- புது விதைகளுக்கான field trials உடனடியாக நிறுத்த பட வேண்டும்
இந்த வழக்கு அக்டோபர் 29 அன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த அறிக்கையை சுப்ரீம் கோர்ட் ஒப்பு கொண்டால், இது மரபணு மாற்றப்பட்ட உணவு விதைகளுக்கு சாவு
மணி ஆக மாறும் வாய்ப்பு உள்ளது
நன்றி:
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
One thought on “BT சச்சரவுகள் – 5”