மரபணு மாற்றபட்ட பருத்தி (Bt cotton) பற்றிய செய்தி கட்டுரைகள் தொடர் முதல் பகுதி:
மரபணு மாற்ற பட்ட பருத்தியில் (Bt cotton) இலைகள், Bollworm புழுவிற்கு விஷம் ஆகும். இதனால் பருத்தியை இவை தாக்குவதை குறைத்து கொண்டன.
ஆனால் இந்த புழுக்கள் இப்போது மற்ற பயிர்களை தாக்க ஆரம்பித்து விட்டன. தக்காளி, கொண்டை கடலை, மக்காச்சோளம் சோளம போன்ற பயிர்களை இந்த பூச்சிகள் தாக்க ஆரம்பித்து விட்டன.
இதனால், மற்ற பயிர்களை பயிரிடும் விவசாயிகள், முன்பு பருத்தி செடிக்கு அதிகம் பூச்சி மருந்து அடிப்பது போல் இந்த பயிர்களுக்கும் அதிகம் பூச்சி மருந்து அடிக்க நிர்பந்தம் ஆகியுள்ளது.
முன்பெல்லாம், பருத்தியில் ஒரு பருவம் மட்டும் தாக்கிய புழு இப்போது choice மேலும் கிடைத்தால் வருடம் முழுவதும் தூள் கிளப்புகிறார். BT cotton தொழிற்நுட்பம் மூலம் ஒரு பயிரின் தலைவலி பல பயிருக்கு ஏற்றுமதி செய்ய பட்டது தான் மிச்சம்
இதனால் மிகவும் தாக்க பட்டது சிவப்பு பயிருதான். (Red gram)
இதில் ஒரு வேதனை என்ன என்றால், எல்லாம் வருவதற்கு முன், பாரம்பரிய விவசாயிகள் பருத்தியை சுற்றி சிவப்பு பயிறு வேலி போன்று பயிர் இடுவர். பூச்சிகள் அவற்றை ருசித்து சாப்பிட்டு விட்டு பருத்தியை விட்டு விடும். அதே நுட்பத்தை இப்போதும் பின் பற்றலாம்.
தொழிற் நுட்பம் பற்றி எப்போதும் கருத்து வேற்பாடு உண்டு. எந்த ஒரு புது தொழிர்நுட்பதையும் முழுமையாக பார்க்கவேண்டும் என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டு
நன்றி: Deccan Chronicle
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்