மரபணு மாற்றபட்ட பருத்தி (Bt cotton) பற்றிய செய்தி கட்டுரைகள் தொடர் மூன்றாம் பகுதி:
மகாராஷ்டிரா Bt பருத்தி சச்சரவுகளில் நடுவம் (epicenter). இந்தியாவில் அதிகம் விவசாயிகள் பருத்தியை பயிர் இடுகிறார்கள்.
இப்போது அங்கேயும், விவசாயிகள், சாதாரண, பாரம்பரிய பருத்தியை பயிர் இட ஆரம்பித்து இருக்கிறார்கள்.
ரவீந்திர தப்தரி, தப்தரி விதைகள் (Daftari Agro) என்ற நிறுவனத்தின் தலைவர். இந்த நிறுவனம், பாரம்பரிய பருத்தி விதைகளை விற்று வந்தது. Bt பருத்தி கடுமையான தாக்குதலால், பாரம்பரிய விதைகளின் விற்பனை படுத்து போனது.
இந்த வருடம், இந்த விதைக்கு கிராக்கி ஏற்பட்டு உள்ளது என்கிறார். போன வருடம் ௨௦௦௦ பக்கெட் விற்ற இந்த நிறுவனம் இந்த ஆண்டு 9000 பக்கெட்கள் ஏற்கனவே விற்பனை ஆகி விட்டது என்கிறார்.
அதே போல், மகாபீஜ் (Mahabeej) என்ற மகாராஷ்டிரா அரசின் விதை நிறுவனம், இந்த ஆண்டு, பாரம்பரிய பருத்தி விதைகளின் உற்பத்தியை 200 கியிண்டல் இருந்து 1500 கியிண்டல் வரை அதிகரித்து இருப்பதாக அதன் தலைவர் தெரிவித்து இருக்கிறார்
அதிக இடு பொருட்கள் செலவு, பயிர் இட்டதால் நஷ்டம் போன்றவற்றால், Bt பருத்தி மீது மகாராஷ்டிரா விவசாயிகளின் தேனிலவு மறைந்து கொண்டு வருகிறது போலும்..
நன்றி:Economic Times
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்