மரபணு மாற்றப்பட்ட பருத்தி (BT cotton) பற்றி இரண்டு விதமான கருத்துகள் இருக்கின்றன.
ஒரு பக்கம், இந்த பருத்தி வந்த பின்பு, எப்படி இந்திய உலக அளவில் இரண்டாவது பருத்தி தயாரிப்பிற்கு முன்னேரியிருகிறது, எப்படி விவசாயிகளின் பூச்சி மருந்து செலவு குறைந்து இருக்கிறது என்று வாதங்கள்.
இன்னொரு பக்கம், இந்த பருத்தி மூலம் பெரிதாக பூச்சி மருந்து செலவு குறையவில்லை, விதை ஒரு சில நிறுவனங்களின் (Monsanto-Mayhco) ஏகபோக உரிமை ஆகிறது, அதனால் அவர்கள் எப்படி விலையை ஏற்றுகிறார்கள் என்று வாதங்கள்.
முதலில் இந்த தொழிற்நுட்பம் எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம். இந்த பருத்தியை மரபியல் வழியாக மாற்றி Bacillus thuringiensis என்ற பக்டேரியாவின் DNA சேர்க்க பட்டு உள்ளது. பருத்தியை கடிக்கும் American Ballworm என்ற பூச்சிக்கு மட்டும் விஷமாகும். இந்த பூச்சி இறந்து விடும்.
இப்போது, முதன் முறையாக விஞான பூர்வமான சில உண்மைகள் வெளி வந்துள்ளன:
- நிலத்தில் உள்ள நீர் தன்மையை பொருத்து செடிகளில் உண்டாகும் விஷம் மாறுகிறது. நீர் தன்மை அதிகமாக மாறும் காலநிலைகளில், விஷம் குறைகிறது. இதனால், பூச்சி கொல்லி வேலை செய்வது குறைகிறது
- அக்டோபர் நவம்பர் மாதங்களில் தான் American Ballworm பூச்சியின் தாக்குதல் அதிகம். அனால் இந்த மாதங்களில் பகலிற்கும் இரவிற்கும் அதிக வெப்ப நிலை மாறுவதால், செடியில் உருவாகும் விஷம் குறைந்து காண படுகிறது.
- American Ballworm என்ற பூச்சிக்கு BT பருத்தியில் விஷம் வந்தாலும், mealy bugs and whiteflies போன்ற பூச்சிகளிற்கு எந்த பாதிப்பும் இல்லை. இதனால், விவசாயிகள், இந்த பூச்சிகளை கொல்ல பூச்சி கொல்லிகளை பயன் படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. Bt பருத்தி விதை வியாபாரிகள் கூறுவது போல், Bt பருத்தியால், பூச்சி மருந்து செலவு குறையவில்லை. உண்மையில், பருத்தியில் பூச்சி மருந்து 2006 வருடத்தில் 640கோடி ரூபாய் இருந்து 2010 வருடத்தில் 800 கோடி ரூபாய்க்கு அதிகரித்து உள்ளது
ஆகையால், Bt cotton என்பது எல்லோர்க்கும் எப்போதும் சஞ்சீவி இல்லை என்பதுதான் உண்மை
நன்றி: livemint
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
One thought on “Bt Cotton பற்றிய சில உண்மைகள்”