கரும்புக்கு மாற்றுப்பயிராக மரவள்ளி

கரும்புக்கு மாற்றுப்பயிராக மரவள்ளி சாகுபடி செய்ய சத்தியமங்கலம் வட்டாரப் பகுதி விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இங்குள்ள கரும்பு விவசாயிகள் கிணற்று மற்றும் ஆற்று நீர் பாசனம் மூலம் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யத் துவங்கிவிட்டனர் .

  • 10 மாதகால பயிரான மரவள்ளிக்கிழங்கு நடவு செய்யப்பட்டு 3 மாதங்கள் வரை 10 நாள்களுக்கு ஒரு முறையும், அதன்பிறகு 15 நாள்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சப்படுகிறது.
  • உழவுக்கூலி, களைவெட்டுதல், உரமிடுதல் உள்ளிட்ட செலவினங்கள் உள்பட ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது.
  • இங்கு பயிடப்படும் முள்வாடி ரக மரவள்ளிக்கிழங்கு தின்பண்டம் (சிப்ஸ்) தயாரிக்க பயன்படுத்துகிறது.
  • இந்த ரகம் தடிமனமாக இருப்பதால், ஏக்கர் ஒன்றுக்கு 11 டன் வரை மகசூல் கிடைக்கும். தற்போது, மரவள்ளி ஒரு டன் ரூ.10 ஆயிரம் 500 வரை விற்கப்படுகிறது.

இதுகுறித்து நெகமம்புதூரைச் சேர்ந்த விவசாயி பழனிசாமி திங்கள்கிழமை கூறியது:

  • கடம்பூர் மலைப் பகுதியில் சாகுபடி செய்யப்படும் ரோஸ் ரக மரவள்ளியைக் கொண்டு ஜவ்வரிசி, மைதா போன்ற உணவுப் பொருள்களை தயாரிக்கின்றனர்.
  • மானாவாரி சாகுபடியைவிட 2 டன் கூடுதல் மகசூல் கிடைப்பதால், மரவள்ளிக்கிழங்கு தற்போது சத்தி பகுதியிலும் பயிரிடப்பட்டுள்ளது.
  • கரும்பைவிட உற்பத்தி செலவு குறைவு மட்டுமின்றி 50 சதம் கூடுதல் வருவாயும் கிடைக்கிறது.
  • கரும்புக்கு மாற்றுப்பயிராக மரவள்ளிக்கிழங்கு சாகுபடி இருப்பதால், கரும்பு விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *