மஞ்சள் தேமல் நோய் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தோட்டக்கலை உதவி இயக்குநர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளதாவது:
- மரவள்ளி செடியில் மஞ்சள் தேமல் நோய் பெருமளவில் பரவி வருகிறது. நோய் காரணமாக, விளைச்சல் குறைந்து, விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது.
- மரவள்ளியில், தோன்றும் மஞ்சள் தேமல் நோய், “ஜெமினி’ வைரஸ் எனப்படும் ஒரு வகை நச்சுயிரியால் உண்டாகிறது. இந்த நச்சுயிரியால், 80 சதவீதம் வரை விளைச்சல் இழப்பு ஏற்படும். நோயினால் இலையின் மேற்பரப்பில் மஞ்சள் நிறப்பகுதிகளும், பச்சைநிற பகுதிகளும் உண்டாகி தேமல் போல் இருக்கும்அளிக்கும்.
- நோய் தாக்குதல் அதிகமாகும் போது, இலைகள் வடிவமிழந்து குறுகி, சிறுத்து சுருங்கி, உருமாறியிருக்கும். நோய் ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு வெள்ளை ஈ என்ற பூச்சியினால் பரவுகிறது. கோடைகாலங்களில் வெள்ளை ஈக்கள் சுறுசுறுப்பாக இயங்குவதால், நோய் தாக்கம் அதிகமாக தென்படும்.
- நோயை கட்டுப்படுத்த நோய் தாக்காத ஆரோக்கியமான விதை குச்சிகளை கவனமாக தேர்வு செய்து, பயன்படுத்த வேண்டும்.
- நோய் தாக்கிய செடிகளை அவ்வப்போது அகற்றி, எரித்து வயலை மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
- மேலும், அறுவடைக்குப் பின் எஞ்சியிலுள்ள சிறு கிழங்குகள், குச்சிகள் ஆகியவற்றை முழுவதும் அகற்றி விடவேண்டும்.
- ஏக்கருக்கு, ஐந்து என்ற அளவில் மஞ்சள் நிற ஒட்டுப் பொறி வைத்து வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம். ரசாயன முறையில் வெள்ளை ஊடுருவி பாயும் பூச்சிக் கொல்லி மருந்துகளான மீதைல் டெமட்டான் அல்லது டைமித்தோயேட் போன்றவற்றை தெளித்து வயலில் வெள்ளை ஈக்கள் பரவுவதை கட்டுப்படுத்தலாம்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்