மாவு பூச்சி தாக்குதல் குறைவால், கோபி சுற்று வட்டாரத்தில் மரவள்ளி கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் மீண்டும் ஆர்வம் காட்ட துவங்கி உள்ளனர்.
கோபி அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி பாசன பகுதிகளில் உள்ள, 24 ஆயிரம் ஏக்கர் மற்றும் கீழ்பவானி பாசன பகுதிகளிலும் வழக்கமாக நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது.
விவசாய கூலி ஆள் பற்றாக்குறை, கூலி உயர்வால், விவசாயிகள் மல்பெரி, மரவள்ளி கிழங்கு என மாற்று பயிர்களுக்கு தாவினர்.
மாவு பூச்சி தாக்குதலால் மல்பெரி மற்றும் மரவள்ளி கிழங்கு பயிரிடுவதிலும் பிரச்னை ஏற்பட்டதால், மற்று விவசாயிமான எள், மக்காசோளம் பயிர்களுக்கு விவசாயிகள் மாறினர்.
மாவு பூச்சி தாக்குதல் குறைய துவங்கியதால், மீண்டும் மரவள்ளி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
சொட்டு நீர் பாசனத்துக்கு முழு மானியம் வழங்கப்படுவதால் சொட்டு நீர் பாசனம் மூலம் மரவள்ளி பயிரிட்டு வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில் –
- சென்ற இரண்டாண்டுக்கு முன் மாவு பூச்சி தாக்குதலால், மரவள்ளி, மல்பெரி ஆகியவை அதிகளவில் பாதிக்கப்பட்டது.
- விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, நஷ்டத்துக்கு தள்ளப்பட்டனர். கோபி சுற்று வட்டாரத்தில் மரவள்ளி பயிரிட்ட விவசாயிகள் அனைவரும் எள், மக்காச்சோளம் ஆகிய பயிருக்கு மாறினர்.
- சென்ற ஆண்டில் மரவள்ளி உற்பத்தி குறைந்து காணப்பட்டது. நடப்பாண்டில் மாவு பூச்சி தாக்கும் சரியாகி விட்டதால், மரவள்ளி பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
- மரவள்ளி நடவு மற்றும் அறுவடை செய்யும் போது மட்டுமே விவசாய கூலி ஆட்கள் தேவைப்படுகிறது. மற்ற நேரத்தில் விவசாயிகளே தோட்டத்தை பராமரித்து கொள்வர்.
- நெல், வாழை உள்ளிட்டவைக்கு மாதந்தோறும் விவசாய கூலி ஆட்கள் தேவைப்படுகிறது.
- தற்போது விவசாய கூலி ஆட்கள் பற்றாகுறை கடுமையாக உள்ளதாலும், மேலும், மஞ்சள்,கரும்பு போன்றவைக்கு கட்டுபடியாத விலையே கிடைக்கிறது. இவ்வாறான பிரச்னையால் மரவள்ளி பயிருக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர்,” என்றனர்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்