கொட்டாங்குச்சி மூலம் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம் கப்!

மறு சுழற்சி செய்வதன் மூலம்  பெரிய அளவில் குப்பை சேருவதை குறைக்கலாம். இளநீர், தேங்காய் உபயோகம் செய்த பின் தூக்கி போட படும் கொட்டாங்குச்சியில் இருந்து உபயோகமாக ஐஸ் கிரீம் கோப்பை செய்யபடுவது மட்டும் இல்லாமல் அவை நல்ல விலைக்கு போகிறது என்பது நல்ல  செய்தி தானே!

ஹிந்துவில் இருந்து தகவல்

பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக் கும் வகையில், அதற்கு மாற்றாக கொட்டாங்குச்சிகள் மூலம் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம் கப்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் கோவை, ஈரோடு மாவட்டத்துக்கு அடுத்தபடியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்னை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் தேங்காய்கள் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் கொப்பரைக்காகவும் அதிக அளவில் தேங்காய் விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய் கொட்டாங்குச்சிகள் கார்பன், பிளைவுட், சீட் போன்றவை தயா ரிக்க பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் தேங்காய் கொட்டாங்குச்சிகளைக் கொண்டு புதிய தொழில்நுட்பமாக ஐஸ்கிரீம் கப் தயாரிக்கப்படுகிறது. இதற்காக சற்று நீளவாக்கில் உள்ள தேங்காய்களை தேர்வு செய்கின்றனர். அவற்றை இயந் திரம் மூலம் நீளவாக்கில் வெட்டி வெயிலில் உலர வைத்து எண் ணெய்க்காக கொப்பரையை எடுத்துவிட்டு, கொட்டாங்குச்சியை ஐஸ்கிரீம் கப்பாக மாற்ற கேரள மாநிலத்துக்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து தரம் உயர்த்தப்பட்டு மெருகூட்டி உள்நாட்டுக்கும், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஐஸ்கிரீம் கப் தயாரிக்க ஏற்ற வகையிலான தேங்காயில் இருந்து கொப்பரையை பிரித்தெடுக்கும் தொழிலாளி.  Courtesy: Hindu
ஐஸ்கிரீம் கப் தயாரிக்க ஏற்ற வகையிலான தேங்காயில் இருந்து கொப்பரையை பிரித்தெடுக்கும் தொழிலாளி. Courtesy: Hindu

இதுகுறித்து செல்லம்பட்டி இணைப்பு சாலையில் தேங்காய் தொழிற்சாலை நடத்தி வரும் சரவணன், ‘தி இந்து’விடம் கூறிய தாவது:

  • நல்ல தரமான தேங்காய் களை தேர்வு செய்து அதனை நீள்வடிவத்தில் வெட்டி, காற்றில் உலர வைக்கிறோம். பின்னர், தேங்காய் கொப்பரையை தனியாக எடுத்துவிட்டு கொட்டாங்குச்சி களை மீண்டும் வெயிலில் காய வைத்து கேரளாவுக்கு அனுப்பு கிறோம்.
  • அங்கு கொட்டாங்குச்சிகளை ஐஸ்கிரீம் கப்களாக மாற்றுகின் றனர். 185 மி.லி முதல் 200 மி.லி அளவுள்ள ஐஸ்கிரீம் வைக்கும் வகையில் கொட்டாங்குச்சிகளை மெருகூட்டி, பிளாஸ்டிக் பொருட் கள் பயன்படுத்த தடை விதிக்கப் பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்கு அவர்கள் ஐஸ்கிரீம் கப் மட்டுமின்றி பல்வேறு உணவு பொருட்கள் பரிமாறவும் பயன்படுத்தி வருகின்றனர்.
  • தற்போது தமிழகத்திலும் திருமணம் உள்ளிட்ட விசேஷங் களுக்கு கொட்டாங்குச்சி மூலம் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம் கப்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுவருகிறது.
  • மூலிகைச் சாறு கடைகளிலும் கொட்டாங்குச்சி பயன்படுத்தப் படுகிறது. இயற்கையாக கிடைக்கக் கூடிய கொட்டாங்குச்சிகளை பிளாஸ்டிக்குக்கு மாற்றாக பயன் படுத்த அனைவரும் முன்வர வேண்டும். இத்தொழிலை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும்.

பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *