பப்பாளி இலையில் இருந்து ஸ்டரா தயாரிப்பு

நாம் கூல் ட்ரின்க் குடித்து விட்டு தூக்கி போடும் ஸ்டரா (straw) 500 ஆண்டுகள் வரை இருக்கும். இதுவும் ஒரு வழியில் நெகிழி மாசே.

இதற்கு கேரளாவில் இருந்து 2 இளைஞர்கள் மாற்று கண்டு பிடித்து உள்ளார்கள். பப்பாளி இலையின் தண்டில் இருந்து ஸ்ட்ரா  தயார் செய்கின்றனர்.

திருவனந்தபுரம் அருகே வாழும் பாரிக் மற்றும் ஜேக்கப் இதை கண்டு பிடித்து விற்றும் வருகின்றனர். இவற்றை அதிக அளவில் தயார் செய்யும் உற்பத்தி திறனையும் கண்டு பிடித்து உள்ளனர்.


அருகே உள்ள 40 பப்பாளி விவசாயிகள் இடம் இருந்து பப்பாளி இலைகளை வாங்கி ஸ்ட்ரா தயாரிக்கின்றனர்.
இப்போது 2500 ஸ்ட்ராங் மாதம் தயாரிக்கும் அளவுக்கு வந்து உள்ளனர்.

விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் இலைகளை வெட்டி, நீரில் அலம்பி, வெயிலில் வைத்து, ஸ்டரா தயார் செய்கின்றனர்.

இவர்களிடம் தொடர்பு கொள்ள – இங்கே கிளிக் செய்யவும்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “பப்பாளி இலையில் இருந்து ஸ்டரா தயாரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *