சீனி துளசி என்று அழைக்கப்படும் ‘ஸ்டீவியோ ரியோடியானா’ ஒரு மருத்துவப்பயிர். இது சூரியகாந்தி குடும்பத்தை சேர்ந்தது.
இப்பயிரில் இருந்து எடுக்கப்படும் ‘ஸ்டீவியோ சைட், ரிபோடிசைட்’ எனும் பொருள் சர்க்கரைக்கு மாற்றாக மிகக்குறைந்த அளவு சர்க்கரை மற்றும் மாவு சத்து கொண்ட இந்த துளசி நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.
சீனி துளசியில் தேவையான பொருள் இலைகள் மட்டுமே. பூக்கள் பூத்தால் செடியின் வளர்ச்சி நின்று விடும்.
பூக்கள் தென்படும் போதெல்லாம் நுனியை கிள்ளி பூக்களை எடுத்து விட்டால் செடி செழித்து வளரும்.
சிறந்த முறையில் பராமரித்து வந்தால் 3 முதல் 5 ஆண்டு தொடர்ந்து நல்ல மகசூல் கிடைக்கும். கிளைகளை பூமியிலிருந்து 10 முதல் 15 செ.மீ., உயரத்தில் வெட்டி எடுத்த பின் இலைகளை பிரித்து கொள்ளலாம். ஆண்டிற்கு நான்கு முறை அறுவடை செய்யலாம்.
ஒரு எக்டேரில் சராசரியாக 2,500 கிலோ முதல் 3,000 கிலோ காய்ந்த சீனி துளசி இலைகள் கிடைக்கும். காற்றோட்டம் உள்ள இடங்களை தேர்வு செய்து சீனி துளசியை பயிரிட வேண்டும்.
இதன் விதைகள் மலட்டுத்தன்மை கொண்டது. விதைகள் முளைப்பு திறன் மிகக் குறைவானதால், திசு வளர்ப்பு முறையில் வீரிய கன்றுகளாக மாற்றி பயிரிட்டு வருகிறார்கள்.
போதுமான வெளிச்சம் மற்றும் 38 டிகிரி மேல் இல்லாத இடம் சிறந்தது. காற்றின் ஈரப்பதம் 60 சதவீதத்திற்கு மேல் இருந்தால் செழித்து வளரும். இது குறைந்த செலவில் அதிக வருமானம் அளிக்கக்கூடிய மாற்றுப்பயிர் திட்டம்.
தொடர்புக்கு 9443570289 .
– எஸ்.சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
good