இன்சுலின் செடி எனப்படும் சர்க்கரைக் கொல்லி சாகுபடி

இன்சுலின் செடி என்று சொல்லப்படும் சர்க்கரைக் கொல்லி அல்லது சிறுகுறிஞ்சான் தமிழகத்தில் வேலிகள், முட்புதர் காடுகளில் பரவலாக வளர்கின்றது. அதிகம் மருத்துவ குணங்கள் இருப்பதால் இதன் நுனி முதல் வேர் வரை அனைத்தும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இவை, சர்க்கரை நோய்க்கு எதிரான ஒரு முக்கிய மூலிகையாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் பீஹார் காடுகளில் பரவலாக காணப்படுகிறது.

மண் மற்றும் காலநிலை

எல்லா மண் வகை மற்றும் எல்லா பகுதிகளிலும் இவை வளரும். செம்மண் அல்லது களிமண் இதற்கு உகந்தது. நீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் சாகுபடியைத் தவிர்ப்பது நல்லது.
சிறுகுறிஞ்சான் மூலிகைக்கு வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டல காலநிலை ஏற்றது. வறண்ட பகுதிகளிலும் வளர்கிறது. உயர், நடுத்தர அல்லது பரவலான மழை கொண்ட பகுதிகள் சாகுபடிக்கு ஏற்றது.

வகைகள்

இலையின் அளவைப் பொருத்து சர்க்கரைக்கொல்லி இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
சிறிய இலை வகை: 1.0-3.5 செ.மீ நீளம் மற்றும் 1.5-2.5 செ.மீ மெண்மை கொண்டது மற்றும் வறண்ட பகுதிகளில் காணப்படும். அடர்ந்த மற்றும் மெல்லிய ரோமங்களை கொண்ட வகை: 3-6 செ.மீ நீளம் மற்றும் 3.5 -5 செ.மீ அகலமும் கொண்டது. சிறிய இலை வகையுடன் ஒப்பிடும்போது இவை கரும் பச்சை நிறத்திலும், மெல்லிய ரோமங்களையும் கொண்டது.

இனப்பெருக்கம்

இந்த விதைகள் அல்லது தாவரத் தண்டுகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

விதைகள் மூலம் இனப்பெருக்கம்

நவம்பர், டிசம்பர் மாதங்களில் சிறுகுறிஞ்சான் பழங்களைத் தாங்கும். விதைகள் புதிதாக அறுவடை செய்யப்பட்ட பழங்களிலிருந்து எடுக்கப்படுகிறது. இரவு முழுவதும் விதைகளை நீரில் ஊற வைக்க வேண்டும் மற்றும் மணலுடன் கலந்த மண்ணில் தொட்டியல் நடவு செய்ய வேண்டும். தினமும் நீர்ப்பாய்ச்ச வேண்டும். விதைகள் 15 நாட்களில் முளைத்து விடும். 40-50 நாட்களுக்குப் பிறகு விதைகளை மணல், மண் மற்றும் தொழுவுரத்தை சமமான அளவு கலந்து வைக்கப்பட்ட பாலித்தீன் பையில் நடவு செய்ய வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 2-3 கிலோ விதைகள் தேவைப்படும்.

தண்டுத் துண்டுகள் மூலம் இனப்பெருக்கம்

இது வணிக ரீதியாக பின்பற்றப்படும் முறையாகும். முதிர்ந்த தண்டுகளில் 15 செ.மீ நீளத்திற்கு வெட்டி அவற்றை 500 பிபிஎம் இன்டோல் ப்யூரிக் அமிலத்தில் 18 மணி நேரம் நேர்த்தி செய்ய வேண்டும். பிறகு இவற்றை மணல், மண் மற்றும் தொழுவுரத்தை சமமான அளவு கலந்து வைக்கப்பட்ட பாலித்தீன் பையில் நடவு செய்ய வேண்டும். பாலித்தீன் பைகளில் நடவு செய்வதற்கு முன்பு தண்டுத் துண்டுகளை 1சதவிகித பாவிஸ்டின் கொண்டு நேர்த்தி செய்ய வேண்டும். தினமும் பாசனம் செய்ய வேண்டும். 90 நாட்களில் வேர்கள் உருவாகும். பின்பு வயலில் நடவு செய்யலாம்.

How to Cultivation insulin plants
நிலம் தயாரித்தல் மற்றும் நடவு

சிறுகுறிஞ்சான் ஒரு பசுமையான கொடியாகும் மற்றும் இவற்றை பயிரிடுவதற்கு ஜூன் மற்றும் ஜூலை ஏற்ற மாதங்களாகும்.

நிலத்தை உழுது சமன் செய்த பின், 4.5மீ அளவுள்ள குழிகளை 2.5 மீ வரிசை இடைவெளி விட்டு எடுக்க வேண்டும் மற்றும் தாவரங்களுக்கு இடையே 1.75 மீ இடைவெளி விடவும் (வரிசைக்குள்). நடவு செய்வதற்கு 15 நாட்கள் முன்பே குழியை தோண்ட வேண்டும் மற்றும் அவற்றை பச்சை இலைகளால் நிரப்ப வேண்டும் மற்றும் மண்ணின் மேற்பரப்பில் குழிக்கு 2கிலோ நன்கு மக்கிய உரம் இட வேண்டும். குழிகளில் பாசனம் செய்து ஒரு வாரம் விட வேண்டும். பிறகு வேர் விட்டத் துண்டுகளை குழிகளில் நடவு செய்ய வேண்டும்.

பயிற்சி

சர்க்கரைக் கொல்லி ஒரு கொடியாக இருந்தாலும் இது “Y” வடிவ இரும்பு சட்டத்தில் 600 கோணத்தில் வளர பயிற்சி அளிக்க வேண்டும். இரண்டு முக்கிய தண்டுகளை எதிர் திசையில் பயிற்சி அளிக்க வேண்டும். கொடி தரையைத் தொடாத வண்ணம் கவனித்துக் கொள்ள வேண்டும். கம்பி வேலியாவதற்கும் பயிற்சியளிக்க வேண்டும்.

உர மேலாண்மை

நிலத்தை தயார் செய்யும்போது ஹேக்டேருக்கு 5 டன் தொழுவுரத்தை அடியுரமாக அளிக்க வேண்டும். தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து முறையே ஹேக்டேருக்கு 95:45:35 கிகி பரிந்துரைக்கப்படுகிறது.

நடவு செய்து உரம் அளித்தவுடன் பாசனம் செய்ய வேண்டும். பிறகு 5-6 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். வெயில் காலங்களில், தட்பவெப்ப நிலையைப் பொருத்து நீர் பாய்ச்சுவதை அதிகரிக்க வேண்டும். போதுமான இடைவெளியில் கைக்களை எடுக்க வேண்டும்.

Image credit : amazon.in

பயிர் பாதுகாப்பு

இலைப்பேன், சிலந்தி மற்றும் பச்சை ஈ இப்பயிரை தாக்கும் முக்கிய பூச்சியாகும். இதைக் கட்டுப்படுத்த டைமெத்தோயேட் (ரோகார் 2மிலி/லி) தெளிக்க வேண்டும். சிலந்தியைக் கட்டுப்படுத்த ஏதேனும் ஒரு சிலந்தி கொல்லியை பயன்படுத்தலாம். ஈயை கட்டுப்படுத்த மோனோகுரோடோபாஸ் (1மிலி/லி) தெளிக்கவும்.

மூலிகைப் பயிர்களுக்கு குறைந்த அளவு அல்லது இரசாயனப் பயன்பாடு தேவையில்லை. வேம்பு சார்ந்த அங்ககப் பொருட்களைப் பயன்படுத்தலாம். மீன் உயிர்ம பொருட்களான பூண்டு விட்டெக்ஸ், கிளிரோ டென்ட்ரான் மற்றும் கலோட்ராபிஸ் ஆகியவற்றை கலந்து சீரான இடைவெளியில் தெளிப்பதன் மூலமாக பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
சாம்பல் நோய் மற்றும் இலைப்புள்ளி நோய் இப்பயிரை தாக்கும் முக்கிய நோய்களாகும் மற்றும் இதைக் கட்டுப்படுத்த நனையும் கந்தகம் 3கி அல்லது மேன்கோசேப் 2கி ஒரு லிட்டர் தண்ணீரில் 10-15 நாட்கள் இடைவெளியில் அளிக்க வேண்டும்.

அறுவடை மற்றும் மகசூல்

நடவு செய்த இரண்டு வருடத்திலிருந்து சர்க்கரைக்கொல்லி அறுவடைக்குத் தயாராகிறது. இலைகள் வணிக ரீதியாக ஜூன் கடைசி வாரம் அல்லது ஜூலை முதல் வாரத்தில் பூக்க ஆரம்பித்தவுடன் அறுவடை செய்யப்படுகிறது. இலைகள் பூக்களுடன் சேர்த்து கைகளால் அல்லது கத்தியால் அறுவடை செய்யப்படுகிறது.

அறுவடை செய்யப்பட்ட இலைகளில் நிழலில் 7-8 நாட்கள் காற்றோட்டத்துடன் உலர்த்தப்படுகின்றன. இலைகளின் தரத்தை பாதுகாக்க நேரடியாக சூரிய ஒளியில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

சராசரி உலர் இலைகளின் மகசூல் செடிக்கு 5-6 கிகி ஆகும். 3-4 வருட பயிர் ஹெக்டேருக்கு 10,000-15,000 உலர் இலைகளை உற்பத்தி செய்கிறது. நல்ல முறையில் பராமரிக்கப்படும் பயிரிலிருந்து 10-15 வருட மகசூல் கிடைக்கும்.

தகவல் : தோட்டக்லை துறை


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *