கருணை கிழங்கு சாகுபடி!

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் ஒரு போக நெல் சாகுபடி விவசாய நிலங்கள் அதிகம் உள்ளன. நெல் அறுவடை முடிந்த பின் விவசாயிகள் நிலத்தை காயவிட்டு விடுவர். பின் காய்கறி அல்லது கருணை கிழங்கு பயிர்களை போன்ற மானாவாரி பயிர்களை பயிரிட்டு கூடுதல் மகசூல் பெற்று வருகின்றனர். இந்த வரிசையில் மேலக்காலை சேர்ந்த முன்னோடி விவசாயி முருகேசன் கருணை கிழங்கு சாகுபடியில் பல மடங்கு லாபம் ஈட்டி வருகிறார்.
அவர் நான்கு ஏக்கரில் ஆறு மாத பயிரான கருணை கிழங்கு பயிரிட்டுள்ளார்.

முதலில் நிலத்தை நன்றாக உழுது, பின் வயலில் அரை அடிக்கு தண்ணீர் தேக்கி, தழைச்சத்தாக ஊமத்தம் செடியை மிதித்து மட்க வைத்து, தொழு உரமாக குப்பை புழுதி ஒரு டன் இட்டு, ஆழ உழுது பரம்படிக்கும்போது அடியுரம் கிடைக்கிறது. நிலத்தை பண்படுத்தி மாற்று விவசாயம் செய்து வருகிறார்.

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

முருகேசன் கூறியதாவது:

கோடைகாலம், மழை காலத்திற்கேற்ப எவ்வகை பயிர்களை பயிரிட்டால் லாபம் கிடைக்கும் என்பதை சிந்தித்து பயிர்களை தேர்வு செய்கிறேன். தற்போது கருணை கிழங்கு பயிரிட்டேன்.

ஒரு ஏக்கருக்கு 30ஆயிரத்திற்கு கருணை விதை கிழங்கு வாங்கி, அதனை பாதுகாப்பாக ஈரமில்லாத, காற்று புகாத அறையில் வைத்து முளை கட்டியவுடன், அதனை பண்படுத்திய நிலத்தில் அரை அடிக்கு ஒரு விதை கிழங்கை நடவு செய்தேன்.

ஒரு மாதம் இடையே முளைக்குருத்து இலை விட, நான்கு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டு, களை எடுத்து பராமரித்தேன்.

ஒரு ஏக்கர் 8 டன் மகசூல்

ஒரு மாதத்திற்கு ஒரு முறை இயற்கை உரம் ஐந்து மூடை, கடலை புண்ணாக்கு, மூன்று மூடை வேப்பம் புண்ணாக்கு இட்டு, மண்புழு உரத்தை தலா 30 கிராம் வீதம் செடியின் வேர் தூரில் பதித்தேன். பட்டம் புரட்டி தண்ணீரை தொடர்ந்து பாய்ச்சினேன். ஒரு ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகும். ஆறாவது மாதத்தில் அறுவடையில் ஏக்கருக்கு 5 டன் முதல் 8 டன் வரை கருணை கிழங்கு கிடைக்கும்.

இம்முறைப்படி கூடுதல் மகசூல் பெறலாம். இதன்படி ஏக்கருக்கு கூடுலாக நான்கு லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டலாம் என்றார்.
தொடர்புக்கு 09360597884 .
எம். சின்ராஜா, சோழவந்தான்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “கருணை கிழங்கு சாகுபடி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *