கூடலுார் பகுதியில், வீட்டு தோட்டங்கள், தேயிலை செடிகள் இடையில் ஆங்காங்கே அதிக காரம் கொண்ட, ‘சீனி மிளகாய்’ இயற்கையாகவே, வளர்கின்றனர்.இதற்கு, நம் உடலின் கொழுப்பு, ரத்த கொதிப்பை கட்டுக்குள் வைக்கும் மருத்துவ தன்மை உள்ளது.
இந்த மிளகாயை, கேரளா மக்கள் தினமும் உணவில் சேர்த்து கொள்கின்றனர்.இதன் தேவை கேரளாவில் அதிகம் உள்ளதால் அங்கு நல்ல விலையும் கிடைக்கிறது.
சீசன் காலங்களில், கிலோவுக்கு, 400 ரூபாய்கு மேல் கிடைக்கிறது. இயற்கையாக வரும், சீனி மிளகாய் தற்போது வருவாய் தரும் பயிராக மாறியுள்ளது.இதனை கருத்தில் கொண்டு, விவசாயிகள் காபி தோட்டங்களில், இந்த செடிகளை, ஊடு பயிராக விளைவிக்க துவங்கியுள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், ‘காபி தோட்டங்களில், சேனை, கருணைக்கிழக்குகளை ஊடுபயிராக பயிரிட்டு வருகிறோம். இதனை காட்டுப் பன்றிகள் நாசம் செய்து விடுகின்றன. இதனை தவிர்க்க, தற்போது காபி தோட்டங்களில், சீனி மிளகாய் நடவு செய்துள்ளோம். இவைகளுக்கு எப்போதும் நல்ல விலை கிடைப்பதால், செலவின்றி வருவாய் கிடைத்து வருகிறது’ என்றனர்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்