குறைந்த முதலீட்டீல் அதிக லாபம் தரும் பட்டர் ரோஸ்

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் பட்டர் ரோஸ்சை விவசாயிகள் பயிரிட்டு பயனடையலாம் என முன்னோடி விவசாயி கூறினார்.புதுக்கோட்டை மாவட்டத்தில்  பல ஆண்டுகளாக மழை இல்லாமல் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், புதுக்கோட்டையை அடுத்த செட்டியாப்பட்டியில் வசித்து வரும் ராமலிங்கம் தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் பட்டர் ரோஸ் செடிகளை பயிரிட்டுள்ளார். இதுகுறித்து விவசாயி ராமலிங்கம் கூறுகையில் —

  • இந்த பட்டர் ரோஸ் செடிகளை அரசு பண்ணைகளில் இருந்து வாங்கி பயிரிட்டுள்ளேன்.
  • இதற்கு மாதத்திற்கு ஒரு ஏக்கருக்கு உரம் மற்றும் மருந்துகளுக்கு ரூ.1,000 முதல் 2,000 வரைதான் செலவு செய்யப்படுகிறது,
  • இந்த பூச்செடியை பயிரிட்ட ஒரு மாத காலத்திற்குள் பூக்கள் பூக்க தொடங்கி விடுகிறது.
  • தினந்தோறும் 3 கூடைகள் முதல் 5 கூடைகள் வரை பூக்கள் பறிக்கப்பட்டு புதுக்கோட்டையில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து ஒவ்வொரு நாளைக்கு ஏற்றார்போல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு பூக்கள் ஏலத்தில் விடப்பட்டும்.
  • இது பல்வேறு விழா காலங்களுக்கு ஏற்ப விலை ஏற்றம், இறக்கம் இருக் கும். ஆனால், ஒரு மாதத்திற்கு எங்களுக்கு செலவுகள் போக ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது.
  • கிணற்று பாசனத்தைக் கொண்டு குறைந்த அளவு தண்ணீர் பாய்ச்சினாலே போதும் என்றார்.

    மாற்றுப் பயிர்களால் பயன்

  • புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை பெய்யாமல் பெரும்பாலான விவசாயிகள் விவசாய தொழிலையே விட்டு விட்டு சென்றுள்ள நிலையில், செட்டியாப்பட்டியில் உள்ள விவசாயிகள் காலத்திற்கு ஏற்ப இதுபோன்ற புது யுக்திகளை கையாண்டு குறைந்த செலவில் அதிகம் லாபம் தரக் கூடிய மாற்று பயிர்களை பயிரிட்டு பயனடைந்து வருகின்றனர்.
  • இதேபோல் புதுகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் விவசாயிகள் காலத்திற்கு ஏற்ப இது போன்ற பயிர் மற்றும் பூச்செடிகளை பயிரிட்டு பயனடைலாம்

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *