சிட்டுக்குருவியும், தூக்கணாங்குருவியும்

உழவனின் நண்பன் மண்புழு என்பது தெரிந்தது. சிட்டுக்குருவியும், தூக்கணாங்குருவியும் உழவனின் உற்ற தோழன்கள் தான். மண் புழுக்கள் தென்னை மரங்களின் வேர்ப்பகுதிக்குள் துளை போட்டு, மேலும் கீழும் சென்று வாழும் குணம் கொண்டது.

இதனால் பூமியின் கெட்டித்தன்மை குறைகிறது. பூமிக்குள் காற்று புகும். நீரும் செல்லும். அதனால் வேர்கள் சுவாசிக்க காற்றும், தண்ணீரும் தடையின்றி பூமிக்குள் புகுந்து வேர்களுக்கு கிடைக்கிறது.

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

‘வேர்கள் சுவாசிக்கின்றது’ என பள்ளி பரு வத்தில் படித்திருப்போம். இது அனைத்து பயிர் களுக்கும் பொருந்தும். நெல், வாழை, கரும்பு, தென்னை, மா, பலா மற்றும் புல், பூண்டு, பயிர்களும் சுவாசிக்க தேவையான காற்று, பூமிக்குள் செல்ல மண் புழுக்கள் உழுது கொடுத்து உதவுகிறது.
நெல், புல், எள், கொள், கடலை, மக்காச்சோளம் என அனைத்து வேளாண் பயிர்களையும் புழு பூச்சிகளிடமிருந்து பாதுகாத்து மகசூல் பெருக செய்வதில் பறவைகளின் பங்களிப்பு மிக முக்கியம். அதில் பெரும் பங்கு வகிப்பது, சிட்டு குருவிகளையே சாரும்.

இரவில் நெல் வயலில் நடமாடும் எலி பயிர்களுக்கு கெடுதல் செய்யக் கூடிய பூச்சிகளை பிடித்து தின்று, பாதுகாப்பது ஆந்தைகள். அதிகாலை நேரங்களில் செத்து கிடக்கும் எலி, பெருச்சாளி மற்றும் அழுகிய பொருட்களை தூக்கி சென்று தெரு சுத்தம் செய்யும் பணியை காகம் செய்கிறது. அதனால் காகம் ‘கிராம தொட்டில்’ என்று அழைக்கப் படுகிறது.

சிட்டுவும், தூக்கணாவும்: பகல் முழுவதும் வேகமாக பறந்து… பறந்து… சென்று தாய் அந்து பூச்சிகளை பிடித்து தின்று வாழ்வது சிட்டு குருவிகள். வயல்களில் கூடுகட்டி குடும்பமாக வாழ்ந்து புழு பூச்சிகளை வேட்டையாடும்.

வயல் அறுவடை காலத்திற்கு முன், சிட்டுகுருவிகள் முட்டையிட்டு தன் இனத்தை 90 முதல் 100 நாட்களுக்குள் பெருக்கி கொள்ளும்.

மொத்த சிட்டு குருவிகளும் நெற் பயிர்களில் ஊடுருவி தின்று அழிக்கும் புழுக்களை பிடித்து தின்று ஒட்டு மொத்தமாக அழிக்கும். தாய் அந்து பூச்சிகளை பறந்து பாய்ந்து பிடித்து தின்று பயிர்களை பாதுகாக்கும்.

சிட்டுக்குருவிகள் உரிமையுடனும், நம்பிக்கையுடனும் வீடுகளில் புகுந்து கூடுகட்டி செல்ல பிராணிகளாக வாழ்ந்த காலங்கள் மனதில் மறக்க முடியாதது.

தென்னை, பனை, ஈச்சை மரங்களில் தொங்குகிற கூட்டில் சிட்டு குருவி குடும்பத்தை சேர்ந்த தூக்கனாங்குருவிகள் வாழ்கிறது.

அந்த கூடு பொறியியல் வல்லுனர்களின் அறிவுக்குக்கூட எட்டாத கூடாக அமைந்திருக்கும். மழை, புயல் காற்றை தாங்கி அந்தக்கூடு இரும்பு வீடு போன்று அமைந்திருப்பது ஆச்சரியமாக தோன்றும். மனித வாழ்க்கை வளம் பெறவும் பசி, பட்டினி தீர உணவு தானிய உற்பத்தி பெருகவும், இயற்கை படைத்து கொடுத்த அற்புத பறவையாக சிட்டுக்குருவியும், தூக்கணாங்குருவியும் இருந்து வருவது இயற்கை அன்னையின் வரப்பிரசாதம்.
தொடர்புக்கு: 08220459341
-டாக்டர். வா.செ.செல்வம்
தென்னை ஆராய்ச்சியாளர்,
திருவையாறு.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “சிட்டுக்குருவியும், தூக்கணாங்குருவியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *