ஜாதிக்காய் மகத்துவங்கள்

ஜாதிக்காய் ஆங்கிலத்தில் Nutmeg என்று அழைக்கப்படும். இதன் தாவர இயல் பெயர் Myristica fragrans

 • ஜாதிக்காய் இலங்கையிலும், இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பயிர் செய்யப்படுகின்றது. பசுமையான சோலைகளில் காணப்படக்கூடியது.
 •  ஜாதிக்காய் இலைகள் மாற்றடுக்கில் அமைந்தவை, பெரியவை.
 •  ஆண், பெண் பு க்கள் தனித்தனியானவை.

 •  ஜாதிக்காய் சதைப்பற்றுள்ளது. மெல்லிய ஓட்டால் மூடப்பட்டிருக்கும்.
 •  ஜாதிக்காய் பழங்கள் மிகவும் மணமுள்ளவை. ஜாதிக்காய் பழங்கள் மேலே பழுப்பு நிறமாகவும், உட்புறம் சதைப்பகுதி நிறைந்ததாகவும் இருக்கும்.
 •  ஜாதிக்காய் தோலை நீக்கி உபயோகிக்கப்படுகின்றது. மேல் தோல் புளிப்பும், துவர்ப்பும் கொண்டது.
 • ஜாதிக்காய் துவர்ப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்டது.
 •  ஜாதிக்காயின் விதைகளின் மேல் சு ழ்ந்துள்ள சிவப்பு நிற திசு ஜாதிபத்ரி எனப்படுகிறது.
 •  ஜாதிக்காயில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் 15 சதவிகிதம் உள்ளது.
 •  அல்பா பைனென், பீட்டர்-பைனென், அல்பா-டெர்பைனென், பீட்டா-டெர்பைனென், மிர்ட்டிசின், எலின்சின், செப்ரோல். ஜாதிக்காய் எண்ணெயில் புட்டிரின் மற்றும் மிர்ஸ்டைன், ஆகிய எண்ணெய் காணப்படுகிறது.
 • ஜாதிக்காய் ஊறுகாய் போடப் பயன்படுகின்றது. உலர்ந்த பழங்கள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
 •  சிறு அளவில் ஜாதிக்காய் தினமும் உண்டுவர, உடல் வெப்பத்தை குறைக்கும்.
 •  ஜாதிக்காய் உண்பதால் செரிமானத்திறன் அதிகரித்து உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
 •  ஜாதிக்காய் குழந்தைகளுக்கான மருத்துவத்தில் பயன்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, சீதபேதி ஆகியவற்றிற்கு ஜாதிக்காய் முக்கிய மருந்தாக உள்ளது.
 •  ஜாதிக்காய் எண்ணெயை மேல் பு ச்சாகத் தடவ, புண்கள், காயங்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்.
 •  ஜாதிபத்திரியிலிருந்து பெறப்படும் எண்ணெய் வாயுத் தொல்லை மற்றும் பேதியைக் குணப்படுத்துகின்றது.
 •  ஜாதிக்காய் எண்ணெயை பல் வலி உள்ள இடத்தில் பு சி வர பல் வலி குணமாகும்
 •  ஜாதிக்காய் கருப்பையை வலுவாக்கும் தன்மைக் கொண்டது.

பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “ஜாதிக்காய் மகத்துவங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *