தமிழகத்தில் கிவி பழம் சாகுபடி

  • கீவி (Kiwi fruit) பழத்தை தமிழக மலைப்பகுதிகளில் விளைவிக்கலாம். சைனீஸ் ஸ்பெரி என்று அழைக்கப்படும் கிவியின் தாவரவியல் பெயர் ஆக்டனிடியா டெசிலிலோசா ஆகும்.
  • கொடி வகையான கிவி நீர்வளம் மிகுந்த உயரமான மலைப்பகுதிகளில் சாகுபடி செய்ய ஏற்றது.
  • பழங்கள் நீளவட்ட வடிவில் சப்போட்டா போன்ற தோற்றத்துடன் இருக்கும். இதன் தோல்மீது சிறு ரோமங்கள் போன்று காணப்படும்.
  • பழங்களின் உட்புற சதைகள் பச்சை நிறத்திலும் ஒரு பகுதியில் உள்ள விதைகள் கருப்பு நிறத்திலும் இருக்கும். பழுத்த பழங்கள் நறுமணம் கொண்டதாகவும் அதிக சத்துக்கள் மற்றும் மருத்துவ குணம் கொண்டதாகவும் இருக்கும்.
  • இப்பழங்களை தனியாகவோ, பிற பழங்களுடன் சேர்த்தோ சாப்பிடலாம்.
  • Courtesy: Wikipedia
    Courtesy: Wikipedia

 

 

 

 

 

  • இப்பழத்தில் வைட்டமின் பி,சி, பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் ஆகியவை அதிக அளவில் உள்ளன. பழங்கள் மனித உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.
  • இப்பயிர் சாகுபடிக்கு நல்ல வசதியுடன் கூடிய வண்டல் மண் மிகவும் ஏற்றது. கடல் மட்டத்திலிருந்து 900 முதல் 1800 மீட்டர் உயரத்தில் போதுமான மழை அதிக நீர்ப்பிடிப்பு உள்ள பகுதிகளில் நன்றாக வளரும்.
  • பொதுவாக பிப்ரவரி மாதத்தில் வேர் குச்சிகளில் மொட்டுக்கட்டுதல் அல்லது ஒட்டுக் கட்டுதல் மூலமாக பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது.
  • கடினம் வாய்ந்த தண்டு குச்சிகள் மூலமாகவும் பயிர் பெருக்கம் செய்யலாம்.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு முகவரி : முனைவர் சோ.அசோக்குமார், முனைவர் ஜெ.ராஜாங்கம், முனைவர் பா.செந்தமிழ்செல்வி, முனைவர் இரா.முத்துச்செல்வி, தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், கொடைக்கானல். போன் : 04542 – 240 931.

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *