சூட்டை தணிக்கும் மூலிகையான சீமை கலாக்காய் திண்டுக்கல்லில் விளைகிறது.
மேற்குதொடர்ச்சி, சிறுமலையில் அடந்த வனப்பகுதியில் கலாக்காய் மரங்கள் உள்ளன. கலாக்காய்கள் சூடை தணிக்கும் தன்மை கொண்டது. சிறுநீர் கடுப்பு, வெள்ளை படுதல் போன்ற நோய்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.
பல்வேறு மருத்துவ குணம் கொண்ட கலாக்காய் மரங்கள் திண்டுக்கல் பலக்கனுாத்தை சேர்ந்த விவசாயி மணிவேலின் தோட்டத்தில் விளைகிறது.
இந்த மரம் ஓராண்டில் காய்க்க துவங்குகிறது. காய்கள் வெளிறிய மஞ்சளாகவும், அரை பழத்தில் ரோஸ் கலந்த மஞ்சளாகவும் இருக்கும். இவை 2 மாதங்களில் மரத்திலே முழுமையாக பழுக்கின்றன. பழம் கருப்பு நிறமாக இருக்கும். பழத்தை நசுக்கினால் அடர் சிவப்பு நிற திரவம் வருகிறது. இதனால் இயற்கை சாயமாகவும் பயன்படுத்தலாம்.
மணிவேல் கூறியதாவது: ஒவ்வொரு மரத்திலும் 100 கிலோ வரை காய்க்கும். பழத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸ் செய்து குடிக்கலாம். இவற்றை மேற்குதொடர்ச்சி மலையில் இருந்து கொண்டு வந்தேன். தற்போது ஒட்டு முறையில் கலாக்காய் கன்றுகளை உற்பத்தி செய்கிறேன். ஒரு செடியை ரூ.30 க்கு விற்க உள்ளோம், என்றார். தொடர்புக்கு 099449 67444.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்