நாகை,கடலோரப் பகுதிகளில் காய்கறிகள் சாகுபடியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் தற்போது அதிக லாபம் தரும் செவ்வந்தி பூ சாகுபடியில் ஆர்வம் காட்டி வருவதால்,கடலோர பகுதி முழுவதும் கண்களுக்கு குளிர்ச்சியாக செவ்வந்தி பூ காட்சியளிக்கிறது.
நாட்டின் எந்த பகுதியிலும் வளரக்கூடிய தன்மையுடையது செவ்வந்தி பூ.மஞ்சள்,சிகப்பு,ஆரஞ்ச்,வெள்ளை நிறத்தில் பூக்கும் செவ்வந்தி ஏராளமான மருத்துவ குணங்களை உடையது.விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை தருவதால்,காய்கறி சாகுபடிக்கு அடுத்தப்படியாக செவ்வந்தி பூ சாகுபடியில் நாகை மாவட்ட கடலோர விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆடி மாதம் நிலத்தை உழுது விதை தெளிக்கும் விவசாயிகள், ஆவணியில் செடிகளை நட்டு தண்ணீர் பாய்ச்சி,சாணி உரமிட்டு பராமரிப்பில் ஈடுபடுகின்றனர்.ஐப்பசியில் பூக்கள் பூக்க துவங்கியதும் லேசான அளவில் டி.ஏ.பி.,உரத்தினை செடிகளுக்கு தருகின்றனர்.இதையடுத்து பூத்துக் குலுங்கும் பூக்களை அறுவடை செய்யும் விவசாயிகளிடம்,கிலோவுக்கு 60 ரூபாய் விலை நிர்ணயித்து வியாபாரிகள் கொள்முதல் செய்து செல்கின்றனர்.
மற்ற பூக்கள் போல் இல்லாமல் 10 நாட்கள் வரை செடிகளிலேயே பூக்கள் வாடாமல் இருப்பதால்,விவசாயிகளுக்கு பாதிப்பில்லை. தேவைக்கேற்ப ஒரு ஏக்கரில் நாளொன்றுக்கு 60 கிலோ வரை பூக்களை அறுவடை செய்கின்றனர்.ஒரு ஏக்கர் நிலத்தில் உழுது,பாத்திகட்டி,செடி நட்டு,தண்ணீர் பாய்ச்சு பராமரிக்க 7 ஆயிரம் ரூபாயில் இருந்து 8 ஆயிரம் ரூபாய் வரை செலவழிக்கும் விவசாயிகளுக்கு,ஐப்பசி மாதத்தில் பூக்கத் துவங்கும் பூ தொடர்ந்து கார்த்திகை,மார்கழி,தை,மாசி மாதம் வரை விவசாயிகளுக்கு வருவாய் ஈட்டித் தருகிறது.
செல்வராஜ்,62 என்ற விவசாயி கூறியதாவது:
- நாகை மாவட்ட கடலோர பகுதியில் நாகையில் இருந்து வேதாரண்யம் வரையிலான பகுதியில் தோட்டப் பயிர்கள் சாகுபடி செய்வதற்கான மணல் பகுதி உள்ளதால்,வேர்கடலை,கத்திரி,புடலங்காய்,கொத்தவரங்காய் சாகுபடி செய்து வந்தோம்.தற்போது செவந்தி பூவிற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதால் செவந்தி பூ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
- மங்கள நாட்களில் நல்ல விø ல கிடைக்கும் என்றாலும் மற்ற நாட்களில் சராசரியான விலையே இருக்கும்.10 நாட்கள் வரை செடிகளிலேயே பூக்கள் தாக்குப்பிடிக்கும் என்பதால் அதிகளவில் பாதிப்பில்லை.தனியார் வியாபாரிகள் நிர்ணயிக்கும் விலைக்குதான் பூக்கள் விற்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்