‘பட்டர்’ பீன்ஸ் தரும் ‘பெட்டர்’ வருவாய்

கொடைக்கானல் அருகே மலைக் கிராமமான தாண்டிக்குடியில் பட்டர் பீன்ஸ் பயிரிட்டு அதிக மகசூல் ஈட்டி வருகிறார் பட்டதாரி இளைஞர் திலீப்.

மலைக் காய்கறி வகையில் முதலிடத்தில் உள்ளது பட்டர் பீன்ஸ். இதில் அதிகளவு புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின், மினரல் உள்ளது. சர்க்கரை நோயாளிகள், மாமிசத்தை உட்கொள்ளாதவர்கள் அதிகளவு பட்டர் பீன்ஸ் உண்கின்றனர். பட்டர் பீன்ஸ்க்கு தனியாக சீசன் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் பயிரிடலாம். விதைத்த 30 நாட்களில் கொடி உருவாகி விடும். 90 நாட்களில் காய்கள் கிடைக்கும். தாண்டிக்குடியில் இருந்து பட்டர் பீன்ஸ், அதிகளவு சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.தாண்டிக்குடியை சேர்ந்தவர் ஜி.திலீப் எம்.எஸ்.டயுள்யூ., படித்துள்ளார்.

Courtesy: Dinamalar

திலீப் கூறியதாவது:

  • தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பதை விட சொந்தமாக விவசாயம் செய்யலாம் என நினைத்து விவசாயத்தில் களம் இறங்கினேன்.
  • பட்டர் பீன்சை ஒன்றரை ஏக்கரில் பயிரிட்டுள்ளேன். இதில் ஒரு கிலோ விதை விதைத்தால் 90 நாட்களில் 100 கிலோ பட்டர் பீன்ஸ் கிடைக்கும்.
  • காய்ப்புக்கு வந்து 4 மாதங்கள் வரை காய்கள் பறிக்கலாம். ஏக்கருக்கு பூச்சி மருந்து, களை எடுப்பு, பராமரிப்பு, நீர் பாய்ச்சுவது என 50 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.
  • ஏக்கருக்கு ஒன்றரை டன் முதல் 2 டன் வரை பட்டர் பீன்ஸ் கிடைக்கும். ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்கிறது. 1.50 லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை வருவாய் பெறலாம். சீசனுக்கு ஏற்ப விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
    மழை இல்லாததால் வேர்ப்புழு, வெள்ளைப் பூச்சி தாக்குதல் உள்ளது. இதற்கு இயற்கை உரங்களையும், மாட்டு சாணத்தையும் கரைத்து தெளித்தால் போதுமானது.
  • இயற்கையான மழை இருந்தால், காய்கள் அதிகளவு பிடிக்கும். விவசாயத்திலும் சாதனை புரியலாம் என்பதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது.
  • நல்ல லாபம் தருவதால், வேளாண் சாகுபடியில் முழுமூச்சாக இறங்கிவிட்டேன், என்றார்.

தொடர்புக்கு 09786022852 .
– எஸ்.அரியநாயகம், திண்டுக்கல்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *