சுருள்பாசி எனப்படும், ‘ஸ்பைருலினா’ வளர்ப்பு பண்ணை நடத்தி வரும், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுப்பையா கூறுகிறார் :
- ‘மாஸ்டர் டிகிரி’ முடித்த நான், சிங்கப்பூர் போய், ஹோட்டல் நடத்தினேன். ஹோட்டலுக்கு வரும் நிறைய பேர், கையில், ‘சயனோ பாக்டீரியா’ என்ற மாத்திரை டப்பா வைத்திருப்பர்.
- பச்சை கலரில் இருக்கும் அந்த மாத்திரை அல்லது ‘கேப்ஸ்யூலை’ சாப்பிட்ட பிறகே, காலை உணவு சாப்பிடுவர்.
- இதுகுறித்து வாடிக்கையாளர் ஒருவரிடம் கேட்டதற்கு, ‘இதன் பெயர், ஸ்பைருலினா. ஊட்டச்சத்து, தாதுச்சத்து, புரதம் நிறைந்தது.
- இதை தொடர்ந்து சாப்பிட்டால், உடலுக்கு எதிர்ப்புச்சக்தி கிடைக்கும். சீனா, தாய்லாந்து நாடுகளிலும், இந்தியாவிலும் அதிகளவு உற்பத்தி ஆகிறது’ என்றார்.
- அப்போது முதலே, இதன் மீதான ஆர்வத்தால், அதுபற்றிய தகவல்களை திரட்டி, ஸ்பைருலினா வளர்ப்பு, பணம் கொழிக்கும் தொழில் என்பதை அறிந்தேன்.
- கடந்த, 2011ல்,- ஊர் திரும்பியதும், மூன்று ஆண்டு அலைந்து திரிந்து, பயிற்சி எடுத்து, ஸ்பைருலினா வளர்ப்பதற்காக, இடம் தேடினேன்.
- கடந்த, 2015ல், இந்த, 8 ஏக்கர் நிலத்தை வாங்கி, தண்ணீர், மின் வசதிகளை ஏற்படுத்தி, ஸ்பைருலினா வளர்ப்புக்கான தொட்டிகளை அமைத்தேன்.
- உற்பத்தி செய்த ஸ்பைருலினாவை, பள்ளி, பள்ளியாக ஆசிரியர்களை சந்தித்து, இதுகுறித்து எடுத்து சொன்னேன். அவர்கள் வாயிலாக, மாணவர்களிடம் சொல்ல வைத்தேன். நிறைய ஆசிரியர்கள், தொடர்ந்து வாங்க ஆரம்பித்தனர்.இப்பகுதியில் இருக்கும் சில டாக்டர்களும், நோயாளிகளுக்கு பரிந்துரைக்கின்றனர். நண்பர்களும், உறவினர்களும் அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் கூறி, வாங்க வைக்கின்றனர்.
- அதனால், விற்பனை நல்ல படியாக நடக்கிறது.
- தமிழகம் மட்டுமின்றி, ஹரியானா மாநிலத்தில் சில நகரங்களுக்கும், குஜராத் மாநிலம், ஆமதாபாத்துக்கும் ஸ்பைருலினாவை அனுப்பி வருகிறேன்.
- இதை பவுடராக மட்டுமல்லாமல், ‘கேப்ஸ்யூல், பேஸ் பேக், சாப்ட் ஜெல்’ மற்றும் சாக்லேட், கடலை மிட்டாய், தலைக்கான எண்ணெய் என, மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாகவும் தயாரித்து விற்கிறேன்.
- தற்போது, சோப்பு, ஷாம்பூவும் தயாரித்துள்ளேன். இன்னும் விற்பனை செய்ய ஆரம்பிக்கவில்லை.
- நேரடி மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள் என, 150 கிலோ விற்பனை மூலம், இதர செலவுகள் போக, மாதம், 2.50 லட்ச ரூபாய் லாபம் கிடைக்கிறது.
- பண்ணையை விரிவுபடுத்தி வரும் நிலையில், மாதம், 1 டன்னுக்கு மேல், ஸ்பைருலினா உற்பத்தி பண்ணலாம். அந்த இலக்கை அடைந்தால், 25 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் எடுத்துவிடுவேன்.
தொடர்புக்கு:9788791706
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
சார் வணக்கம்
என் பெயர் சரவணன். நான் ஈரோடு மாவட்ட கோபிசெட்டிபாளையம் நகரில் உள்ளேன்.நான் உங்களது பதிவேற்றத்தினை பார்த்து எனக்கும் சுருள்பாசி தயாரிக்கும் ஆர்வம் அதிகம் ஏற்பட்டுள்ளது.இதற்காக பயிற்சி பெற்று கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதற்கு எனக்கு உதவி செய்ய முடியுமா சார்.