விளை பொருட்களையும், காய்கறி செடிகளையும் சேதம் செய்யும் பறவைகளால் இழப்பு ஏற்படாமல் தடுக்க தமிழக அரசு மானிய விலையில் பறவை வலை தரும் திட்டத்தை தோட்டக்கலைத்துறை மூலம் அறிமுகம் செய்துள்ளது.
மலைப்பகுதியில் உள்ளவர்கள் மயில்களால் சேதம் ஏற்படுவது குறித்து, விவசாயிகள் குறைதீர் முகாம் கூட்டங்களில் முறையீடு செய்து வந்ததால் விவசாயிகள் நலன் பேணிட பறவை வலைகள் பெரிதும் உதவும் என அரசு கருதியது.
காய்கறி நாற்று, வெங்காயம், தக்காளி என எந்த பயிரையும் விட்டு வைக்காமல் மயில் மற்றும் பறவைகள் பலவித தொல்லைகள் தரும் பகுதியில் நான்கு பக்கமும் விவசாயிகள் மீன் பிடி வலை போன்ற பெரிய ஓட்டைகள் உடைய நைலான் கயிற்றால் பின்னப்பட்ட உறுதியான வலைகள் பராமரித்திட அதிக செலவு வராது.
நல்ல உறுதியான கம்பு ஊன்றி அதிக வலைகளை தொங்க விட்டால் போதும். ஏதேனும் பறவை பறந்து வந்தாலும் வலையில் சிக்கினால் பிறகு தன் முயற்சியில் விடுவித்து கொண்டால் திரும்ப வருவதை தவிர்த்து விடும்.
இதை ‘பறவை விரட்டும் வலை’ என்று குறிப்பிடுகின்றனர். பழ மரங்கள் மற்றும் பலன் தரும் மரங்களில் கூட சில பறவைகள் அமர்ந்து உணவுக்காக தானியங்களை உண்டு வருவதும், சில பகுதிகளில் நீர் அருந்த வரும் பறவைகள் அங்கேயே தங்கி இனப்பெருக்கம் செய்வதும் உண்டு. மானியத்தில் பறவை வலை தேவைப்படுவோர் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
– இளங்கோவன்,தோட்டக்கலை உதவி இயக்குனர்,உடுமலைப்பேட்டை.
நன்றி:தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்