பாக்குமட்டையில் லாபம் பார்க்கலாம்!

பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக, பாக்குமட்டை பொருட்களை சந்தைப்படுத்தி வரும், தஞ்சையை சேர்ந்த காலித் அகமது கூறுகிறார்

  • இயந்திர சலவை தொழில் செய்து வந்த எனக்கு, பாக்கு மட்டை தொழில் செய்யும் நண்பரின் அறிமுகம் கிடைத்தது.
  • அதன் மீதான ஆர்வத்தால், இந்த தொழிலில் இறங்க முடிவு செய்தேன்.கோவையிலிருந்து இயந்திரங்களை வாங்கி, பாக்குமட்டை தட்டு செய்தேன்
  • . ஆனால், நிறைய மட்டைகள் வீணானதுடன், தொழிலாளர்களும் அதிகமாக தேவைப்பட்டனர்; கணக்கு பார்த்தபோது, பலத்த நஷ்டம் ஏற்பட்டது.அதன்பின், நானாகவே ஒவ்வொன்றையும் முயற்சி செய்து பார்க்க ஆரம்பித்தேன்.
  • இந்த தொழிலில், மிக மிக முக்கியமானது, பாக்குமட்டையை ஊற வைக்கும் பதம் தான்; பலகட்ட முயற்சிக்கு பின், அது தெரிந்தது.
  • பாக்கு தட்டு நிறைய பேர் செய்வதால், மக்களின் தேவைக்கு ஏற்ப, வேறு பொருட்களை உருவாக்க சிந்தித்தேன். நானாகவே இயந்திரத்தை வடிவமைத்து, ‘டீ கப்’ உருவாக்கினேன்;
  • அது, மக்களிடமும், வணிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.அதை தொடர்ந்து, ஸ்பூன், ஐஸ்கிரீம் கப் மற்றும் சில உணவகங்களில் பிரியாணி டப்பா செய்து தருமாறு கேட்க, அதையும் செய்யஆரம்பித்தேன்.
  • இவ்வாறு, 15க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்து வருகிறேன். இதனால், நஷ்டத்தில் இருந்த நிறுவனம், இப்போது, மாதம், ஒரு லட்ச ரூபாய் லாபம் ஈட்டும் வகையில் வளர்ந்துள்ளது.
  • கர்நாடகாவில் தான், பாக்கு மட்டைகள் அதிகம் கிடைக்கின்றன.
  • தமிழக விவசாயிகள், பாக்கு மரங்களை அதிகம் விவசாயம் செய்தால், பாக்குமட்டை விலையும், அதிலிருந்து தயாரிக்கும் பொருட்களின் விலையும் குறையும்.
  • வரும் ஜனவரி முதல், பிளாடிக்கிற்கு தடை விதித்துள்ளதால், இந்த தொழில் ஏறுமுகத்தில் தான் செல்லும். பாக்கு மரங்களை விளைவித்தால், விவசாயிகள் பயன்பெறுவர்;
  • அதுமட்டுமின்றி, குடிசைத் தொழில் போல, பாக்குமட்டை தொழில் பெருகினால், பெரும்பாலான மக்கள் வேலைவாய்ப்பு பெறுவர்.
  • மேலும், இந்த தட்டுகளை பயன்படுத்திய பின், வெயிலில் உலர்த்தி, மீண்டும் சிலமுறை பயன்படுத்தலாம்.
  • இறுதியாக இதை அரைத்து, கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கலாம். மண்ணில் போட்டாலும், 50 நாட்களில் மக்கி உரமாகும்.
  • இவ்வாறு அனைத்து வகையிலும் பயன் தரும் இந்த தொழில் வளர்ந்தால், மக்களின் உடல்நலமும் மேம்படும்; சுற்றுச் சூழலும் காக்கப்படும்.

தொடர்புக்கு: 9791212500

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *