பானகம் தயாரிப்பது எளிது!

மதுரை மனையியல் கல்லூரியில் விவசாயிகள், தொழில் முனைவோருக்கு புளி பானகம், அடர் கரும்புச்சாறு, சப்போட்டா சாறு எடுக்கும் தொழில் நுட்பம் கற்றுத்தரப்படுகிறது.

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

இதுகுறித்து மனையியல் கல்லூரி உணவியல் மற்றும் சத்தியல் துறைத்தலைவர் காஞ்சனா கூறியது:

  • விளைச்சலோடு விவசாயிகள் நின்றுவிடாமல் அதை மதிப்புக்கூட்டிய பொருளாக மாற்றும் தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.
  • விவசாயிகள் தனியாக செய்யாமல் குழுவாக சேர்ந்து தொழில்நுட்பத்திற்கு மாறினால் விளைபொருளுக்கு விலை கிடைக்காத காலத்தில் அவற்றை மதிப்பு கூட்டலாம். தொழில்முனைவோர்களும் இதை பயன்படுத்தலாம்.
  • இதற்கான கருவிகள் கல்லூரியில் உள்ளன. அவற்றை வாடகை முறையில் பயன்படுத்தலாம்.
  • ஆலைக் கரும்புச்சாற்றை நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியாது. அதை இரண்டடுக்கு பாத்திரத்தில் ஊற்றி மூன்றில் ஒரு பங்காகும் வரை நீராவி மூலம் பாகாக காய்ச்ச வேண்டும். இதை நீண்ட நாட்கள் வைத்திருக்கலாம்.
  • பொரி உருண்டை, அதிரசம், கடலை மிட்டாய், கேக், பிஸ்கெட்டில் இச்சாறை சேர்த்தால் மணமும் சுவையும் அதிகமாக இருக்கும். பாட்டிலில் சேகரித்து வைக்கலாம்.
  • புளியை சுடுதண்ணீரில் ஊறவைத்து சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை, சுக்கு சேர்த்து காய்ச்சி வடிகட்ட வேண்டும்.
  • சோடியம் பென்சோயேட்டை “பிரிசர்வேடிவ்’ ஆக பயன்படுத்தலாம். இந்த பானகத்தை மற்ற குளிர்பானங்களை போன்று குடிக்கலாம். இதேபோல சப்போட்டா சாறும் தயாரித்து விற்கலாம், என்றார்.

தொடர்புக்கு 04522424680

நன்றி: தினமலர் 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *