பார்த்தீனியம் அழிக்கும் முறைகள்

ராவுத்தப்பேரியில் நடந்த முகாமில் பார்த்தீனியம் விஷசெடி ஒழிப்பு முறைகள் பற்றி வேளாண்மை இணை இயக்குநர் சவுந்திராஜ் விளக்கினார்.

 • ஹிஸ்டிரோ போராஸ் என்ற விஷத்தன்மை வாய்ந்த களை எல்லாவித தட்பவெப்ப சூழ்நிலையிலும் வளரக்கூடியது.
 • இது நீண்ட காலத்துக்கு சுமார் 30 ண்டுகள் வரை முளைப்புத்திறன் கொண்ட விதைகளை அதிகளவில் உற்பத்தி செய்கிறது.
 • இவை காற்றின் மூலம் மிக வேகமாக பரவக்கூடியவை.
 • ஒரு ஆண்டு விதைப்பு ஏழு ஆண்டுகளுக்கு களையெடுப்பு என்ற கருத்து பார்த்தீனியத்தை பொறுத்தவரை உண்மையாக உள்ளது.
 • ஒரு செடியில் சுமார் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விதைகள் உருவாகின்றன.
 • இவை முதிர்ச்சி பெறாத நிலையில் கூட வளரக்கூடிய தன்மை உடையவை.
 • வறண்ட கோடை மாதங்களில் பார்த்தீனியம் ஒரு ரொசேட் வடிவத்தில் தோன்றுகிறது.ஆனால் மழை காலத்தில் சுமார் 90 சென்டி மீட்டர் வரை வளர்வதேடு பசுமையான இலைகளுடன் அதிகளவில் பூக்கின்றன.
 • இச்செடியானது ஆண்டு முழுவதும் பூக்கும் தன்மை கொண்டது.
 • இக்களைகள் கால்நடைகளில் சரும ஒவ்வாமையின்மையையும், செம்மறி ஆடுகளில் விஷத்தன்மையினையும் ஏற்படுத்துகின்றது.
 • மேற்கண்ட பாதிப்புகளுக்கான முழுக்காரம் பார்த்தீனின் என்னும் நச்சு ஆகும்.

இக்களையினை கட்டுப்படுத்தும் முறைகள் வருமாறு:
கைவினை முறை:

 • களை மண்ணில் இருந்து வெளிப்படும் போது இம்முறையினை பயன்படுத்தலாம்.
 • அதிக பரப்பில் காணப்படும் போது கை களை எடுக்கும் முகாம்கள் நடத்தலாம்.
 • பயிர் சுழற்சி பயிர் சாகுபடி உள்ள நிலத்தில் மழைக்காலத்தில் பயிருடன் சாமந்தியினை சுழற்சி முறையில் சாகுபடி செய்து கட்டுப்படுத்தலாம்.

அல்லிலோபதிக் விளைவு:

 • இக்களையினை கேசியா செரிசியா என்னும் தாவரம் மூலம் கட்டுப்படுத்தலாம்.

மக்க வைத்தல்:

 • பார்த்தீனியம் விஷ செடி களையில் பூக்கும்போதே மக்கவைத்து உரமாக்கும் முறையினை பயன்படுத்தி அதிக வெப்பத்தின் மூலம் விதை முளைப்புத்தன்மையை அழிக்கலாம்.

ரசாயன முறை:

 • தரிசு நிலங்களில் திறந்தவெளி, சாலையோரம் மற்றும் ரயில் இருப்புப்பதை ஓரங்களில் அதிகளவில் இதுபோன்ற நிலங்களில் 15 முதல் 20 சதவீத சமையல் உப்பு கரைசல் தெளிப்பதன் மூலம் இக்களையினை கட்டுப்படுத்தலாம்.
 • ஒட்டும் திரவத்துடன் 2,4-டி-2.5 கிலோ கிராம் எக்டர் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்
 • பயிர் சாகுபடி உள்ள நிலங்களில் களைக்கொல்லிகள் பெரியளவில் பயன்படுத்தலாம்.
 • சோளம், மக்காச்சோளம், கரும்பு பயிர்களில் சிமாசின் அட்ரசின் களைக்கொல்லியினையும் பயிறு வகை மற்றும் பருத்தி பயிர்களில் அலக்குளோர் மற்றும் பூட்டோகுளோர் களைக்கொல்லியினை முறையே பயன்படுத்தி பார்த்தீனியம் விஷ செடிகளை அழிக்க வேண்டும்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

4 thoughts on “பார்த்தீனியம் அழிக்கும் முறைகள்

 1. வணக்கம்
  இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது முதலில் வாழ்த்துக்கள்… சென்று பார்வையிட இதோ முகவரி
  http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_24.html?showComment=1390519247701#c4761600294553611110

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  • gttaagri says:

   வலைச்சரம் மூலம் பசுமை தமிழகம் இணைய தளத்திற்கு அறிமுகம் கொடுத்தற்கு நன்றி!!
   அன்புடன்,
   admin பசுமை தமிழகம்

 2. வணக்கம்…

  வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி…

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_24.html) சென்று பார்க்கவும்… நன்றி…

  • gttaagri says:

   வலைச்சரம் மூலம் பசுமை தமிழகம் இணைய தளத்திற்கு அறிமுகம் கொடுத்தற்கு நன்றி!!
   அன்புடன்,
   admin பசுமை தமிழகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *