புகையிலை விதை எண்ணெய் சமையல் எண்ணெய்?

“புகையிலை தாவர விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், சமையலுக்கு ஏற்றது என்பதால், அதன் உற்பத்தியை அதிகரிப்பது அவசியம்’, என, தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் முருகேச பூபதி பேசினார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலை, மத்திய வேளாண் அமைச்சகத்தின் தேசிய எண்ணெய் வித்து மற்றும் தாவர எண்ணெய் வளர்ச்சி குழுமம் சார்பில், தென்மண்டல ஆய்வுக் கூட்டம், வேளாண் பல்கலையில் நடந்தது.
பல்கலை துணைவேந்தர் முருகேச பூபதி, துவக்கி வைத்து பேசியதாவது:

 

  • சர்வதேச அளவில், எண்ணெய்வித்து பயிர்கள் சாகுபடி செய்யும் நாடுகளில், சாகுபடி பரப்பளவு, உற்பத்தி, இறக்குமதி ஆகியவற்றில், இந்தியா முக்கிய நாடாக இடம்பெற்றுள்ளது. மொத்த சமையல் எண்ணெய் பயிர்கள் சாகுபடி நிலப்பரப்பில், இந்தியாவின் பங்கு, 12 முதல் 15 சதவீதமாக, உள்ளது. ஆனால், சமையல் எண்ணெய் பயிர்களின், மொத்த உற்பத்தியில்,ஏழு முதல் எட்டு சதவீதம் மட்டுமே, இந்தியாவின் பங்காக உள்ளது.
  • மொத்த சமையல் எண்ணெய் உற்பத்தியில், ஆறு முதல் ஏழு சதவீதம் மட்டுமே, இந்தியா பங்களிக்கிறது. இந்தியாவில், ஆண்டுதோறும் 16.8 மில்லியன் டன்கள் சமையல் எண்ணெய், பயன்படுத்துப்படுகிறது. இதில், 8.2 மில்லியன் டன்கள், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. சமையல் எண்ணெய் தேவையை இறக்குமதி மூலமாகத்தான், இந்தியா நிறைவு செய்கிறது. எனவே, எண்ணெய் உற்பத்தி திறனை, அதிகப்படுத்த வேண்டும்.
  • தற்போது, சர்வதேச அளவில் சமையல் எண்ணெய், தாவர எரிபொருள் உற்பத்தி செய்வதற்கு, அதிகமாக பயன்படுத்துவதால், உற்பத்தி செய்யப்படும் சமையல் எண்ணெய், சமையலுக்கு கிடைக்காமல் போகும் அபாயம், ஏற்பட்டுள்ளது. இது, சமையல் எண்ணெய் விலையையும் அதிகரிக்கும்.
  • அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் வருமானம் ஆகியவற்றினால், சமையல் எண்ணெய் உட்கொள்ளும் அளவு, ஆண்டுதோறும் ஐந்து சதவீதம் அதிகரிக்கிறது. இதனால், உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது அவசியம்.
  • புகையிலை தாவர விதையிலிருந்து பெறப்படும் எண்ணெய், சமையலுக்கு ஏற்றது என்பதால், இதன் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும்.
  • இந்தியாவில், புகையிலை நான்கு முதல், 4.5 மில்லியன் எக்டர், நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு, 700 மில்லியன் கிலோ புகையிலை உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம், ஆண்டிற்கு, நான்காயிரத்து 400 கோடி ரூபாய், அன்னிய செலாவணியை ஈட்டுகிறோம்.
  • புகையிலை விதையில், 35 சதவீதம் எண்ணெய் சத்து உள்ளது. இதில், நிகோடின்’ நச்சு இல்லாததால், சமையல் எண்ணெய்யாகவும், தாவர எரிபொருள் உற்பத்தி செய்வதற்கும் பயன்படுத்தலாம்.
  • புகையிலை அதிக வருமானம் தரும் பயிர் என்பதால், விவசாயிகளும் விரும்பி சாகுபடி செய்கின்றனர்.
  • புகையிலை விதை எண்ணெய் குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு, தேசிய எண்ணெய் வித்து மற்றும் தாவர எண்ணெய் வளர்ச்சி குழுமம், நிதியுதவி அளிக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.
நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *