பூவரசம்பூ பூத்தாச்சு என்ற பாட்டை அறிவோம். இந்த மரத்தின் சிறப்புகளை பார்ப்போமா?
தேக்கு மரத்திற்கு இணையாக கதவு, ஜன்னலுக்கு பூவரச மரத்தின் தடிகள் பயன்படுத்தப்படுவதால் அவற்றின் கன்றுகளை இலவசமாக வழங்கி ஊக்குவிப்பதற்கான முயற்சியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.திண்டுக்கல் சிறுமலை வனச் சரக அலுவலர் சரவணன் கூறியதாவது:
- ஆக்சிஜனை அதிகம் வெளியிடும் சக்தி பூவரச மரத்தில் உள்ளது.
- ஏழைகளின் தேக்கு என அழைக்கப்படுகிறது.
- எல்லா காலங்களிலும் பசுமையாகவே காணப்படும்.
- வீடுகளின் ஓரங்களில் இவற்றை வளர்க்கலாம்.
- தெற்கு ஆற்காடு பகுதியில் மர சாமான்கள் செய்வதற்கு அதிகமாக இவ்வகை மரங்களின் தடிகளைத்தான் பயன்படுத்துகின்றனர்.
- குறைந்தளவு தண்ணீரை பயன்படுத்தி வளரும் தன்மை பெற்றது.
- மரத்திலிருந்து உதிரும் இலைகள் மண்ணை வளப்படுத்தும்.
- ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பூவரச மரம் இருக்க வேண்டும் என்பதற்காக இதன் கன்றுகளை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளோம்,’ என்றார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்