அது… பத்து அடி ஆழத்தில் சுண்ணாம்பு பாறைகள் நிறைந்த கரிசல்காடு. கடல் நீர் போல் உப்புச்சுவை மிகுந்த தண்ணீர். சுட்டெரிக்கும் வெயில். வறட்சியால் பாளம் பாளமாக பிளந்துள்ள நிலம். முயல், எலி, கீரி, மயில்கள் வயலில் ஆட்டமாடி கொஞ்சமாக விளையும் சிறிய தானியங்களையும் ஒன்று விடாமல் கொற்றி தின்று விடுகின்றன. இவைகளை கட்டுப்படுத்த முடியாமல், விவசாயிகள் பலருக்கு நிலத்தை பார்த்து கண்ணீர் சிந்துவதை தவிர வேறு வழியில்லை.
வறண்ட பூமியை வளமான பூமியாக மாற்றுவது குறித்து மூளையை கசக்கிய முன்னோடி விவசாயிகள் வெ.சுப்பாராஜ் (முன்னாள் வேளாண் உதவி இயக்குனர்), அவரது மைத்துனர் நாராயணசாமி.
இவர்களுக்கு விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே உப்பத்தூர் கிராமத்தில், 18 ஏக்கர் கரிசல்காடு உள்ளது. பாரம்பரிய விவசாயத்தில் இருந்து சற்று விலகி லாபம் தரும் மலைவேம்பு, தீக்குச்சி மரங்கள், சவுக்கு, தென்னையை வளர்க்கின்றனர். ஊடுபயிராக மிளகாய், ராகி, ஒட்டுக்கம்பு, மக்காச்சோளம் விளைவிக்கின்றனர். சுப்பாராஜ், நாராயணசாமி கூறியதாவது:
- மலைவேம்பு குறுகிய காலத்தில் மற்ற மரங்களை விட, அதிக வருமானம் தரக்கூடியது.
- குறைந்த அளவு நீர்வளம் உள்ள பகுதிகளிலும் நன்றாக வரும்.
- பராமரிப்பு குறைவு. நடவு செய்த மூன்று ஆண்டில் கூழ் மரமாக காகித ஆலைக்கும், நான்காம் ஆண்டில் பிளைவுட் தயாரிக்கவும், ஏழாண்டு மரங்களில் மரப்பொருட்கள் செய்யலாம். வியாபாரிகள் தேடி வருவர்.
- தீக்குச்சி மரங்களை தீப்பெட்டி தொழிற்சாலைக்கு விற்கலாம். இவை பலன் தர பல ஆண்டுகள் தேவை. எனவே சொட்டுநீர் பாசன முறையில் ஊடுபயிர் விவசாயத்தில் கவனம் செலுத்துகிறோம். இதன் மூலம் மாத வருமானத்திற்கு குறைவில்லை என்றனர்.
தொடர்புக்கு 09443133018 .
கா.சுப்பிரமணியன், மதுரை
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்