மதுரையில் தாய்லாந்து ‘ட்ராகன் புரூட்’ பழங்கள் சாகுபடி

மேலூர் அருகே விவசாயி ஒருவர் வெளிநாடுகளில் மட்டுமே உற்பத்தியாகும் ட்ராகன் புரூட்’ பழச் செடிகளை தாய்லாந்து தொழில்நுட்பத்தில் சாகுபடி செய்துள்ளார்.

சுற்றுலாத் தலங்களில் துரி யன், பேரிக்காய், பிளம்ஸ், ட்ரீ டொமேட்டோ, சீத்தா பழம், ஸ்ட்ராபெரி, ட்ராகன் புரூட்’ உள்ளிட்ட பழங்களுக்கு மவுசு அதிகம். இதில், அரிய வகை ‘ட்ராகன் புரூட்’ பழத்தில் வைட்டமின்கள், நார்ச்சத்து, தாதுக்கள் நிறைந்துள்ளன.

இப்பழங்கள், தாய்லாந்து, மலேசி யா, சீனா உள்ளிட்ட நாடுகளில் அதிகம் சாகுபடி ஆகிறது. அந்த நாடுகளில் இருந்து இந்தப் பழங்கள் இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.

அதனால், இவற்றின் விலையும் அதிகமாகவே இருக்கும். ஒரு பழம் ரூ.30 முதல் 40 வரை விற்கிறது. சில சமயங்களில் 100 ரூபாய் வரை விற்கிறது.

இதுவரை வெளிநாடுகளில் இருந்து மட்டுமே இறக்குமதியான ‘ட்ராகன் புரூட்’ பழங்களை தற்போது தமிழக விவசாயி களும் சாகுபடி செய்யத் தொடங்கி உள்ளனர்.

மேலூர் அருகேயுள்ள பூஞ்சுத்தி கிராமத்தில் விவசாயி ஆர்.வாசுதேவன் தென் தமிழகத்தில் முதல் முறையாக 2 ஏக்கரில் இந்த ‘ட்ராகன் புரூட்’ செடிகளைச் சாகுபடி செய்துள்ளார். ஒரு ஏக்கருக்கு ரூ.1.50 லட்சம் வரை செலவாகிறது.

இந்த விவசாயியின் முயற்சியைக் கேள்விப்பட்ட தோட் டக்கலைத்றை துணை இயக் குநர் பூபதி மற்றும் அதிகாரிகள் அவரைப் பாராட்டியதோடு, அவருக்கு ஊக்கமளித்து ரூ.70 ஆயிரம் மானியம் வழங்கி சொட்டு நீர்ப்பாசன வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.

நன்றி: ஹிந்து

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *