பந்தலுார் பகுதியில், ‘மலேயன்’ ஆப்பிள் அதிகஅளவில் விளைந்துள்ளது.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் பகுதி வீட்டு தோட்டங்களில், ‘மலேயன்’ ஆப்பிள் எனப்படும் பழங்கள், அதிகளவில் விளைந்துள்ளன. காயாக இருக்கும்போது, இப்பழங்கள் வெள்ளை மற்றும் இளம் சிவப்பு நிறத்தில் காணப்படும்; பழுத்தவுடன் சிவப்பு நிறத்திற்கு மாறும்.
இதில், வைட்டமின் ‘சி’ சத்து அதிகளவில் உள்ளது. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. தொடர்ந்து உட்கொண்டால், புற்றுநோய் எதிர்ப்பு சக்தி பெருக வாய்ப்புள்ளது. ‘ஜம்புக்காய் மற்றும் சாம்பக்காய்’ என, இவற்றை அழைக்கும் உள்ளூர் மக்கள், இதை பயன்படுத்தி ஊறுகாய், ஒயின் போன்றவற்றை தயாரிக்கின்றனர்.
குன்னுார் பழப்பண்ணை இணை இயக்குனர் டாக்டர் ராம்சுந்தர் கூறுகையில், ”பல்வேறு நோய் எதிர்ப்பு சக்தி உள்ள இப்பழங்கள், கூடலுார், பந்தலுார் பகுதிகளில் நிலவும் காலநிலையில் மட்டுமே, வளரும் தன்மை கொண்டது,” என்றார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்