லாபம் தரும் இலுப்பை!

ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பார்கள். அந்த அளவிற்கு இம்மரம் சிறப்பு வாய்ந்தது. முன்னோர் காலத்தில் கோயிலுக்கு விளக்கு போட இலுப்பை (Mahua) விதையில் இருந்து எண்ணெய் எடுத்தனர்.


விதையின் எடையில் 50-70 சதவீதம் வரை எண்ணெய் எடுக்கலாம். நோய்களை நீக்கி அலுப்பை விரட்டும் மருந்தாகவும் பயன்பட்டது.

பாரம்பரிய பெருமை

கிராமப்புற பகுதிகளில் கடவுள் வழிபாடும் அதோடு தொடரும் நிகழ்வுகளும் இரவில் தான் நடக்கும் என்பதால் தீவெட்டி கொளுத்த இலுப்பை எண்ணெய் பயன்பட்டது.

இலுப்பைத் தோப்புகள் கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்டதற்கு பல இலக்கிய சான்று, கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் ‘சப்போனின்’ என்ற வேதிப் பொருள் இருப்பதால் சலைவை சோப்பு தயாரிக்க முடியும். இலுப்பையில் புண்ணாக்கு, அரப்புத்துாள், கால் நடை தீவனம், உரங்களும் தயாரித்தனர். பாரம்பரிய பெருமையுள்ள இந்த மரம் தற்போது அழிந்து வருகிறது.

நல்ல லாபம்

தமிழகம், கர்நாடகாவில் உள்ள இந்த மரம் அழிவை நோக்கி செல்லும் தாவரமாக பன்னாட்டு அமைப்புகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மரத்தில் இரண்டு வகை உண்டு அதை ‘மகுலா’ என்று அழைக்கின்றனர். 70 அடி உயரம் வளரும் இம்மரம் இலையுதிர் தன்மை கொண்டது.

8 – 15 ஆண்டுகளில் பூக்க தொடங்கும். பிப்ரவரி – ஏப்ரல் பூக்கும், ஜூன் – ஆகஸ்ட் காய் காய்க்கும். 10 ஆண்டு மரங்கள் முதிர்ந்த காய்களை தரும்.

இனப் பெருக்கம் செய்ய முற்றிய காய்களை சேகரித்து, வெயிலில் காய வைத்து விதைகளை 6 -12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

5-7 நாட்களில் 70-90 சதவீதம் முளைத்து விடும். 4-6 மாத கன்றுகளை நடவு வயலில் குறிப்பிட்ட இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்

. முதிர்ந்த மரத்திலிருந்து ஆண்டிற்கு 20-24 கிலோ விதைகள் கிடைக்கும். நல்ல மரத்தில் இருந்து ஒட்டு கட்டுதல் மூலம் கன்றுகளை பெறலாம்.

விவசாயிகள் இலுப்பை விவசாயம் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.

– எஸ்.சந்திரசேகரன், வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை. 9443570289

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *