லெமன்கிராஸ் சாகுபடி

இரகங்கள் :
ஒடி – 19, 408, ஆர்ஆர்எல் – 39, பிரகத், பிரமான, சிபிகே – 25, கிருஷ்ணா மற்றும் காவேரி.

Lemon grass-Vasanai pul

மண் மற்றும் தட்பவெப்பநிலை
வடிகால் வசதியுடைய அங்கக சத்துக்கள் நிறைந்த, மணற்பாங்கான நிலங்கள் சாகுபடிக்கு உகந்தவை. மண்ணின் கார அமிலத்தன்மை 6.0 ஆக இருக்கவேண்டும். மிதமான தட்பவெப்பநிலையும், அதிக அளவு மழை மற்றும் காற்றிலள்ள ஈரப்பதம் வேண்டும்.

விதை மற்றும் விதைப்பு
ஒர எக்டருக்கு நடவு செய்ய 55,500 வேர்க்கட்டைகள் தேவைப்படும். வேர்க்கட்டை (4 கிலோ / எக்டர்) மூலம் உற்பத்தி செய்யலாம். விதைகளை நாற்றாங்கால் மூலம் உற்பத்தி செய்து ஜ¤ன் – ஜ¤லை மாதங்களில் நடவு செய்யலாம்.

நிலம் தயாரித்தல்
நிலத்தை நன்கு உழுது, ஒரு எக்டருக்கு 20-25 டந்ன மக்கிய தொழு உரம் இட்டு நன்கு பண்படுத்தவேண்டும். தேவையற்ற அளவில் பாத்திகள் / பார்கள் அமைத்து நடவு செய்யவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
ஒரு எக்டருக்கு 50 கிலோ தழைச்சத்து உரத்தை முதல் பாதியை நடவின்போதும் மீதியுள்ள உரத்தை நடவு செய்த  ஒர மாதம் கழித்து இடவேண்டும். இரண்டாம் வருடத்தில் அறுவடையின் பின்பும் மற்றும் ஒரு மாததம் கழித்து தழைச்சத்து உரத்தினை இடவேண்டும்.

நீர் நிர்வாகம்
நடவு செய்த உடன் நீர்ப்பாசனம் செய்யவேண்டும். எலுமிச்சை புல்லுக்கு ஏழு முதல் பதினைந்து நாள் இடைவெளியில் நீர்ப்பாசனம் செய்யவேண்டும்.

பின்நேர்த்தி
தேவைப்டும்போது கைக்கிளை எடுக்கவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பு
இப்பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் காணப்படுவதில்லை.

அறுவடை
நடவு  செய்த 90வது நாளில் முதல் அறுவடையும் அதன் பின்னர் 75-90 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யவேண்டும். அறுவடையின் போது புல் / புதர்களை தரை மட்டத்திலிருந்து 10-15 செ.மீ அளவில் வெட்டவேண்டும். எண்ணை எடுக்க தண்ணீர் (அ) ஆவியாதல் முறை மூலம் சுத்திகரிக்கவேண்டும். எண்ணை கிடைக்கும் அளவு 0.2 – 0.3 சதவீதம்.

மகசூல் :
புல்                          = 20-30 டன் / எக்டர்
எண்ணை முதலாம் ஆண்டு       = 25 கிலோ / எக்டர்
இரண்டாம் ஆண்டு முதல்        = 80-100 கி
ோ / எக்டர்

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *