வருமானம் தருகிறது கோதுமைப் புல் பொடி!

கோதுமைப் புல் வளர்த்து அதை அரைத்துப் பொடியாக்கி, ‘அமேசான்’ வாயிலாக விற்பனை செய்து வரும், திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜ்குமார் கூறுகிறார் :

திண்டுக்கல் காந்தி கிராமம் பல்கலை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்பு படித்து, துபாய், கத்தார், ஒமன் நாடுகளில் வேலைப் பார்த்தேன்.

வீட்டுத் தோட்டம் அமைத்து கொடுப்பது, பசுமைக் குடில் போட்டுத் தர்றது, பூங்கா உருவாக்குறது, சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பது என, பல வேலைகளைப் பார்த்தேன்.ஒரு கட்டத்தில், மனதில் வெறுப்பு ஏற்பட்டது. இந்த வருமானத்தை நம் ஊரிலேயே சம்பாதிக்கலாம் என தோன்றி, வேலையைத் துாக்கிப் போட்டு விட்டு ஊருக்கு வந்து விட்டேன்.இங்கு வந்ததும், விவசாயம் செய்யப் போறேன்னு சொன்னதும், வீட்டுல கொலை வெறியாகிட்டாங்க; நண்பர்கள், உறவினர்கள் எல்லாரும் கேலி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. எதையும் கண்டுக்காம என் முடிவில் தெளிவாக இருந்தேன்.திண்டுக்கல்லை விட்டு வெளியேறி, வட மாநிலங்களுக்குப் போயிட்டேன். ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்கள்ல இருக்கிற மக்கள், கோதுமை ஜூஸ் குடிப்பதைப் பார்த்தேன்; அது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

அவர்களிடம் விசாரித்ததில், நம் ஊரில் டீ குடிப்பது போல, அங்கு கோதுமைப் புல் ஜூஸ் குடிப்பது வழக்கம் என தெரிந்தது. உடனே அதைப் பற்றிய தகவலைத் தேட ஆரம்பித்ததில், அது உடம்பு ஆரோக்கியத்துக்கு நல்லது என்று தெரிந்தது.

இரண்டு கிலோ கோதுமை விதையுடன் திண்டுக்கல் திரும்பினேன். கோதுமைப் புல் வளர்த்து, அதைப் பொடி செய்து, பாட்டிலில் அடைத்து விற்கப் போறேன்னு சொன்னதும், மறுபடியும் சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. கோதுமைப் புல் சாகுபடி செய்வதில் முனைப்பாக இறங்கினேன். எங்களுக்குச் சொந்தமான, 50 சென்ட் நிலத்தை உழுது பாத்தி பாத்தியாகத் தயார் செய்தேன். ௧ கிலோ கோதுமையை விதைத்தால், 3 கிலோ புல் கிடைக்கும்.

அதை வெட்டி, காய வைத்து அரைத்து பொடியாக்கினால், 100 முதல் 150 கிராம் வரை கிடைக்கும். மறுபடியும் அந்தப் பொடியை காய வைத்து பாட்டிலில் அடைத்து, விற்பனைக்கு அனுப்புகிறேன்.தினமும், 30 முதல் 40 பாட்டில் வரை விற்பனையாகிறது. சராசரியாக, 30 பாட்டில் வீதம், 10 ஆயிரத்து 470 ரூபாய் வருமானம் கிடைக்கும். சில சமயம் விற்பனையாகாமலும் இருக்கும்.

அந்த வகையில் மாதக் கணக்குப் பார்த்தால், 20 நாட்களுக்கு, 2 லட்சத்து 9 ஆயிரத்து 400 ரூபாய் கிடைக்கும். அதில், செலவு 70 ஆயிரம் ரூபாய் ஆகி விடும். அதுபோக, 1 லட்சத்து 39 ஆயிரத்து 400 ரூபாய் லாபமாக கிடைக்கும்.நாம் அருகம்புல் ஜூஸ் குடிப்பது போல், வட மாநிலத்தில் கோதுமை புல் ஜூஸ் குடிப்பது நமக்கு லாபத்தை ஏற்படுத்துகிறது

தொடர்புக்கு: 9787887288

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “வருமானம் தருகிறது கோதுமைப் புல் பொடி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *