வறண்ட பூமியான சிவகங்கையில் சொட்டு நீர் பாசனம் மூலம் சந்தன மரங்களை வளர்த்து வருகிறார் நாட்டரசன்கோட்டை விவசாயி செல்வம். அவர் கூறியதாவது:
- நாட்டரசன்கோட்டை அருகே மாங்காட்டுப்பட்டியில் 10 ஏக்கரில் பரிட்சார்த்தமாக சந்தன மரம் நடும் முயற்சியில் இறங்கினேன்.
- வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள மாவட்டமாக இருப்பதால்,தண்ணீரின்றி விவசாயம் செய்வது கடினம். இருப்பினும் சொட்டு நீர் பாசனம் மூலம் சந்தன மரங்களை வளர்த்து வருகிறேன்.
- கடந்த 6 ஆண்டுக்கு முன் ஏக்கருக்கு 300 சந்தன மரக்கன்று வீதம் 3,000 கன்றுகளை நடவு செய்தேன். பெங்களூருவில் இருந்து ஒரு கன்று ரூ.150க்கு வாங்கினேன். 2 ஆண்டு நன்கு பராமரித்து, வளர்ந்த பின் முறையாக தண்ணீர் விட்டும், பூச்சி தாக்காமல் மருந்து தெளித்தால் போதும். 15 முதல் 20 ஆண்டு கழித்து வருவாய்துறை அனுமதியுடன் மரங்கள் வெட்டலாம்.
- வளர்ந்த மரங்களில் 30 சதவீதத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். எஞ்சிய மரங்களை நாமே விற்கலாம்.
- மலைப்பிரதேசங்களில் மட்டுமே வளரும் சந்தன மரங்களை வறண்ட சிவகங்கையில் வளர்க்கும் நோக்கில் வளர்க்கிறேன்.
- சந்தன மரங்களை அரியானா, அருணாச்சல பிரதேசத்திற்கு அனுப்பி, அங்கு சந்தன தைலம் தயாரிப்பர். அன்றைய அரசு விலை நிர்ணயப்படி பல லட்சம் வருவாய் கிடைக்கும், என்றார். ஆலோசனைக்கு 09442452330.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்