சிவகங்கை அருகே துளசி விவசாயத்தில் மாதம் ரூ.30 ஆயிரம் சம்பாதித்து வருகிறார் விவசாயி. வறண்ட பூமியான சிவகங்கையில் சாதாரண துளசி விவசாயத்திலும், சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார் விவசாயி மாணிக்கம்.
சிவகங்கை-மதுரை ரோட்டில் பொன்னாகுளத்தைச் சேர்ந்த இவர், ஒரு ஏக்கரில் துளசி விவசாயம் செய்து உள்ளார். எவ்வித செலவினமும் இன்றி, மாதம் ரூ.30 ஆயிரத்திற்கு மேல் சம்பாதிக்கிறார். அவர் கூறியதாவது:
- ஒரு காலத்தில் வயல் வரப்புகளில் தானாக வளர்ந்து துளசி செடிகளை அறுத்து விற்பர். இதையே விவசாயமாக செய்து, லாபம் சம்பாதிக்க லாம் என, “தினமலர்’ நாளிதழில் படித்தேன். இதற்காக மதுரையில் பயிற்சி வகுப்பிற்கு சென்றேன். இதன் மூலம் தென்னை தோட்டத்திற்குள் துளசி விவசாயம் செய்ய முடிவெடுத்தேன்.
- கடந்த 8 மாதத்திற்கு முன், ரூ.300க்கு துளசி வாங்கி நாற்று வளர்த்தேன். ஒரு மாதத்தில் பிடுங்கி நடவு செய்தேன்.
- 8 நாளுக்கு ஒரு முறை தண்ணீர் மட்டும் பாய்ச்சுகிறேன்.மருந்து எதுவும் தெளிக்க தேவையில்லை. தற்போது, பலனுக்கு வந்துள்ளது. நிழலில் நன்கு வளரும்.
- தென்னைக்குள் ஊடு பயிராக நடலாம். பகுதி, பகுதியாக தினமும் அறுவடை செய்கிறோம். ஒரு மாதத்திற்கு ரூ.30 ஆயிரத்திற்கு மேல் சம்பாதிக்க முடிகிறது.
- தற்போது ஒரு கிலோ ரூ.20 வரை விற்கப்படுகிறது. திருமணம், கோவில் சீசனில் கூடுதலாக சம்பாதிக்கலாம். சளி, இருமல், வயிறு கோளாறு, துளசி தைலம், துளசி தேன் தைலம், கோவில் மாலை, துளசி பவுடர் தயாரித்தல் உட்பட பல்வேறு பயன்பாடுக்கு உதவுகிறது. குச்சிப்படாமல் பருவத்தில் அறுவடை செய்தால் ஆண்டுதோறும் பலன் அறுக்கலாம். ஒருமுறை நடவு செய்தால் தொடர்ந்து பலன் எடுக்கும் ஒரே விவசாயம், என்றார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Contact. No pls my no.9941650079
Manikkam conduct no please