ஆண்டிபட்டியில் வாசனை திரவிய தயாரிப்புக்கான மருகு செடி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆண்டிபட்டி பகுதியில் கடந்த பல ஆண்டுக்கு முன் பருத்தி, சிறுதானியம்,பயறு வகைகள்,காய்கறிகள் சாகுபடி செய்து வந்தனர். இந்த விவசாயத்தில் எதிர்பார்த்த லாபம் இல்லாத நிலையில்விவசாயிகள் சிலர் மாற்று பயிராக பூக்கள், மரிக்கொழுந்து சாகுபடியை தேர்வு செய்தனர்.மார்க்கெட்டில் நிலையில்லாத விலை இதிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில்தற்போது ராஜதானி, கீ.காமாட்சிபுரம், அம்மாபட்டி, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில்உள்ள விவசாயிகள் சிலர், மருகு செடி சாகுபடியை துவக்கி உள்ளனர்.
மரிக்கொழுந்தைப்போன்றே வாசனை கொண்ட இந்த செடிகள் கதம்ப மாலையில்அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
வரத்து கூடுதலாக இருக்கும்பட்சத்தில், வாசனை திரவியதயாரிப்புக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிக்கு அனுப்பப்படுகிறது.
கீ.காமாட்சிபுரம்விவசாயி அறிவழகன் கூறியதாவது:
- மருகு செடியின் தண்டுகளை வெட்டி நடவுசெய்த 30 நாட்கள் தொடர்ந்து தண்ணீர் மற்றும் உரம் இட்டு கண்காணிக்க வேண்டும்.
- 70 நாட்களுக்குப்பின்வளர்ந்த செடிகளை பறித்து பயன்படுத்தலாம்.
- ஒரு ஆண்டு வரையில் தொடர்ந்து பலன் கொடுக்கும்.
- இச்செடிகள் தரத்தைப்பொறுத்து தற்போது கிலோ ரூ. 40 முதல் 50 வரை விலை கிடைக்கிறது
- .தற்போது பெய்யும் மழை இதற்கு ஏற்றதாக உள்ளது. மற்றதைவிட மருகு சாகுபடிவிவசாயிகளுக்கு சாதகமாகவே இருக்கிறது, என்றார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
மருகு விதை எங்கு கிடைக்கும்
நான் மருகு செடி வளர்க்க வேண்டும். கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவன். மனர்ப்பங்கான நிலம். நீர் வசதி உள்ள நிலம்.பாயிர் செய்யும். முறை பற்றி கூறுங்கள்.செடி எங்கு கிடைக்கும்.