கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை வட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு வனத் துறையின் சார்பில், விலையில்லா மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன. இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட வனத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வனவியல் விரிவாக்கக் கோட்டத்தின் மூலம், தமிழ்நாடு உயிர்ப் பண்ணைப் பாதுகாப்பு, பசுமையாக்கல் திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி வருவாய்க் கோட்டத்திற்கு உள்பட்ட கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை வட்டங்களில் உள்ள தனியார் பட்டா நிலங்களில் விவசாயிகளுக்கு விரைவில் நிறைந்த பயன் தரக்கூடிய உயர்ரக மரக்கன்றுகள் விலையில்லாமல் வழங்கப்பட உள்ளன.
இதன்படி, தேக்கு, வேங்கை, ஈட்டி, சில்வர்ஓக், மலைவேம்பு, பெருமரம், வேம்பு, புளி, பலா, ஜம்புநாவல், காட்டுநெல்லி, எலுமிச்சை, முருங்கை போன்ற மரப் பயிர்களை விலையில்லாமல் ஒரு ஏக்கருக்கு 200 வீதம் அதிகபட்சமாக 2,500 மரக் கன்றுகள் வரை நடவு செய்து கொடுக்கப்பட உள்ளது.
இதற்கு பட்டா அல்லது கணினி சிட்டா நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவை தேவை. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மரம் நடவு செய்ய ஆர்வம் உள்ள விவசாயிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட அலுவலர்களைத் தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களை விரைவில் கொடுத்துப் பயன் பெறலாம்.
மேலும், விவரங்களுக்கு வனவியல் விரிவாக்க அலுவலரை 04343293016 என்ற தொலைபேசி எண்ணிலும், 08695558503 என்ற எண்ணில் வனவரையும், 09442825159 என்ற எண்ணில் தொழில்நுட்ப உதவியாளரையும் தொடர்பு கொள்ளலாம்
நன்றி:தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
for erode side this free tree can get ah pls