யூரியா பயிர்களுக்கு நைட்ரோஜன் அதிகம் கொடுத்து வளர்ச்சியை கொடுக்கும் உரம். ஆனால் பயிர்கள் யூரியாவை 40% சதவீதம் தான் உட்கொள்கின்றன. மீதி வீணாகிறது. நிலத்தடி நீர் கெடுகிறது. அடித்து செல்லப்படும் யூரியா நீர்நிலைகளை கெடுக்கிறது.
யூரியாவை வேப்ப எண்ணெய் மூலம் முலாம் பூசும் போது நைட்ரோஜென் வெளியாகும் வேகம் குறைகிறது. உரத்தின் பயன் பல நாட்கள் கிடைக்கிறது. நீர் நிலைகள் மாசு படுவதும் குறைகிறது.
இதை கருத்தில் கொண்டு 2015 ஆண்டு NDA அரசு யூரியாவை வேப்ப எண்ணெய் முலாம் பூசுவது கட்டயாப்படுத்த பட்டது. இப்படி முலாம் பூசுவதால், விவசாயத்திற்கு என்று விலை குறைவாக வாங்கி அதை விவசாயம் இல்லாமல் மற்ற தொழிற்களுக்கு (பாலில் கலப்படம் செய்ய, சோப்பு செய்ய) திசை திருப்பவதும் குறைந்தது. இந்தியாவில் 38% யூரியா இறக்குமதி செய்ய படுகிறது. இப்படி யூரியா சரியாக பயன் படுத்தினால் இறக்குமதியும் குறையும்.
இந்த மாதிரி நல்ல திட்டம் ஆனால் நல்லபடியாக நடக்கவில்லை.. ஏன் தெரியுமா? நம் நாட்டில் தேவை ஆன அளவு வேப்ப எண்ணெய் இல்லாததே காரணம்!
32 மில்லியன் டன் யூரியாவிற்கு 20000 டன் வேப்பஎண்ணெய் தேவை.ஆனால் 3000 டன் எண்ணையே அரசிற்கு கிடைக்கிறது என்கிறார் ரவீந்திரநாதன், தமிழ்நாடு வேப்ப எண்ணெய் தயாரிப்பாளர் சங்க தலைவர்
சந்தையில் வேப்ப எண்ணெய்க்கு அதிகம் மவுசு இருப்பதால்,பலர் கலப்பட வேப்ப எண்ணெய் செய்ய ஆரம்பித்து உள்ளார்கள்!
இந்தியாயாவில் 25 மில்லியன் வேப்ப மரங்கள் தானாக வளர்கின்றன. அவற்றில் இருந்து 10% கூட எண்ணெய் எடுப்பதில்லை! வேப்ப கோட்டையை வெயிலில் நன்றாக காய வைத்து அதன் பிறகே கோல்டு பிரஸ் வழியாக எண்ணெய் எடுக்க வேண்டும். இப்போதைய நிலைமைப்படி ஒரு லிட்டர் எண்ணெய் செய்ய 150 ரூபாய் ஆகிறது. ஆனால் யூரியா ஆலைகள் ரூ 90 மட்டுமே கொடுக்க இஷடப்படுகின்றன
இப்படி நம் நாட்டின் மரமான வேப்ப எண்ணெய் அதிக அளவில் தேவை இருக்க,யாரும் இதை சரியாக பயன் படுத்தி கொள்ள வில்லை. சரியாக வாய்ப்பை பயன் படுத்தினால் பலருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். இந்த மரங்கள் எந்த பராமரிப்பும் இல்லாமல் தானே வளர்பவை.
இப்போது நம் நாட்டில் இந்த வாய்ப்பை பயன் கொடுத்தி கொள்ளாததால் சீனா அரசு 20 மில்லியன் மரங்களை நட்டு, கடந்த 5 ஆண்டுகளில் 40% சந்தையை கைப்பற்றி உள்ளது!!
இப்படி தான் நாம் கோட்டை விடுகிறோம்!
நன்றி: DTE
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்