ராமேஸ்வரம் மல்லி சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, தர்காஸ் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி டி. பத்மநாபன் கூறியதாவது:
ராமேஸ்வரம் மல்லி செடிகளை வாங்கி நட்டுள்ளேன். இதில், குண்டு, மெலிது, நடுத்தரம் என, மூன்று விதமான மல்லி ரகங்கள் சாகுபடி செய்யலாம். ஒரு முறை நட்டுவிட்டால், 12 ஆண்டுகளுக்கு மகசூல் கொடுக்கும். அதற்கு ஏற்ப, ஆண்டுதோறும் செடிகளை வெட்டி விட வேண்டும்.
மல்லி சாகுபடி பொருத்தவரையில், கோடை காலத்தில் செம்பேன் மற்றும் பச்சை நிற பூச்சிகள் தாக்குதல் வரும். மழைக்காலத்தில், கழுத்தறுத்தான், காம்பு உதிர்வு நோய்கள் தாக்கம் ஏற்படும். இதை கட்டுப்படுத்தினால், மல்லி சாகுபடியில் கணிசமான மகசூல் ஈட்ட முடியும்.
கோடை காலத்தை காட்டிலும், மழைக்காலத்தில் மல்லி விலை அதிகமாக விற்பனையாவதால், அதற்கு ஏற்ப சாகுபடிகளை மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: டி. பத்மநாபன், 6374274841
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்