சொட்டுநீர் பாசனத்தில் மாதுளை

  •  மருத்துவ குணங்கள் நிறைந்த மாதுளையை, பள்ளிப்பட்டு பகுதி விவசாயிகள், சொட்டு நீர் பாசனத்தில், சாகுபடி செய்து வருகின்றனர்.
  • உள்ளூரில் விளையக்கூடிய பழ வகைகளில், அதிக விலை கொண்டது மாதுளை. இது, இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவையை ஒருங்கே கொண்ட மருத்துவ குணங்கள் நிறைந்தது.
  • ஒரு கிலோ பழம், குறைந்தபட்சமாக, 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • மாதுளை, எல்லாவிதமான மண்ணிலும் விளையக்கூடியது.
  • பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், சொட்டு நீர் பாசன முறையில், மாதுளை பயிரிட்டுள்ளனர். இதன் மூலம், குறைந்த தண்ணீர் செலவில், நிறைவான மகசூல் செய்து வருகின்றனர்.
  • செடிகள், நட்ட நான்காம் ஆண்டில் இருந்து, குறைந்தபட்ச பலன் கொடுக்கும்.
  • ஏழாம் ஆண்டில் இருந்து, ஒரு ஏக்கருக்கு, 20 – 25 டன் மகசூல் கிடைக்கும்.
  • பிப்., முதல், மார்ச் வரையிலான காலகட்டத்தில், பூக்கத் துவங்கி, ஜூலை முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில், பழங்கள் அறுவடைக்கு கிடைக்கும்.
  • பழங்களை சிறிய பைகளால் தனித்தனியே கட்டி வைத்து, பூச்சி தாக்குதலில் இருந்து காப்பாற்றுகின்றனர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *