காந்திகிராம பல்கலை வேளாண் அறிவியல் மையத்தில் “உயர் அடர் நடவு’ முறை மா சாகுபடியால் ஏக்கருக்கு 12 டன் கிடைக்கிறது.
உலகில் 40 சதவீத மா இந்தியாவில் உற்பத்தியாகிறது. நம் நாட்டில் அதிக பரப்பில் மா சாகுபடி செய்தாலும் உற்பத்திதிறன் எக்டேருக்கு 6.1 டன்னாக உள்ளது. தமிழகத்தில் 4.5 டன்னாக உள்ளது. ஆனால் உலகளவில் உற்பத்தி திறன் 7.15 டன்னாக உள்ளது.
அதிக பரப்பில் குறைந்த கன்றுகளை நடுதல், பராமரிப்பு இல்லாதது போன்றவற்றால் உற்பத்திதிறன் குறைகிறது.
பழைய முறையில் ஏக்கரில் 10க்கு10 மீ இடைவெளியில் 40 கன்றுகள் நடப்படுகிறது. முழு உற்பத்தி திறன் 15 ஆண்டுகளில் துவங்கும். மகசூல் 4 டன்.
தற்போது “அடர் நடவு’ முறையை அரசு பரிந்துரை செய்கிறது. இதில் ஏக்கருக்கு 5க்கு 5 மீ இடைவெளியில் 160 கன்றுகள் நடலாம். முழு உற்பத்தி திறன் 8 ஆண்டுகளில் துவங்கும். மகசூல் 7 டன். “உயர் அடர் நடவு’ என்ற புதிய முறையில் ஏக்கருக்கு 3க்கு 2 மீ இடைவெளியில் 666 கன்றுகள் நடலாம்.
முழுஉற்பத்தி திறன் 4 ஆண்டுகளில் துவங்கும். மகசூல் 12 டன் கிடைக்கும்.
இதில் அல்போன்சா, பங்கனப்பள்ளி, இமாம்பசந்த், தோத்தாபுரி ரகங்களை பயிடலாம். ஆண்டுதோறும் கவாத்து செய்வதால் குறைந்த உயரமே வளரும். இதனால் மருந்து தெளிப்பது, அறுவடை செய்வது எளிது.
அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், தொழில்நுட்ப வல்லுனர் செந்தில்குமார் கூறுகையில், “”உயர் அடர் நடவு முறை குறித்த செயல்விளக்கம் அமைத்துள்ளோம். இதுகுறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம்,” என்றனர்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Could you please give a number to get more details about this process