அல்போன்சா ரகம் – இரு மடங்கு வருவாய்!

மானாவரி மற்றும் தோட்டப்பயிரில், மா சாகுபடியை லாபகரமாக செய்ய ஆலோசனை கூறும் சாந்தகுமார் கூறுகிறார்

  • கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியைச் சேர்ந்தவன். பெங்களூரு, அல்போன்சா, நீலம் உட்பட மற்ற ரகங்களும், என்னிடம் உள்ளன.
  • அனைத்திற்கும் ஓரளவு ஒரே பராமரிப்பு போதுமானது. ஆண்டுக்கு ஆறு முறை உழுது, தொழு உரம் ஒரு மரத்திற்கு, 50 கிலோ இடுவது அவசியம்.
  • தேவைக்கேற்ப வளர்ச்சி ஊக்கி, நுண்ணுாட்டச் சத்து போடலாம். மழைக் காலமாக இருந்தால், ரசாயன உரங்களையும், வறட்சியின்போது இயற்கை உரங்களையும் பயன் படுத்துவதே நல்லது.
  • சொட்டு நீர்ப் பாசனம் போட்டுள்ள நான், வறட்சிக் காலத்தில் பெரிய தொட்டியில் தண்ணீர் நிரப்பி, 15 நாட்களுக்கு ஒரு முறை, நீர் பாய்ச்சுவேன்.
  • மாங்கன்றுகளை நட்ட, மூன்று ஆண்டுகளில் இருந்து காய்ப்புக்கு வரும். நல்ல பராமரிப்பு இருந்தால், இரு ஆண்டுகளிலேயே பலன் தர ஆரம்பிக்கும்.
  • சாதாரணமாக ஒரு மா மரம், 100 ஆண்டுகள் வாழும். முழுமையான வளர்ச்சி என்பது, 10 ஆண்டுகள் ஆனதில் இருந்து துவங்குகிறது.ஒவ்வொரு ஆண்டும், முக்கியப் பருவமான ஜூன், ஜூலை மாதங்களில், முழு வீச்சிலும், இடைப்பருவமான, செப்டம்பர், அக்டோபரில் குறைந்த எண்ணிக்கையிலும் பழங்கள் கிடைக்கும்.
  • முக்கியப் பருவத்தில், ஒரு மாதத்திற்கு ஒரு மரத்தில், அல்போன்சா ரகம் என்றால், 100 கிலோ, இடைப் பருவத்தில், 150 கிலோ. கிளிமூக்கு எனில், 150 கிலோ, இடைப்பருவத்தில், 200 – 250 கிலோ காய்க்கிறது.
  • ஒரு டன், 13 ஆயிரம் ரூபாய் வரை விலை போகிறது. ஏக்கருக்கு, 40 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கும். இதுவே அல்போன்சா என்றால், இரு மடங்கு வருவாய் வரும்.
  • இடைப்பருவத்தில் தாவர வளர்ச்சி நன்றாக இருக்கும் என்பதால், பூப்பதை அதிகப்படுத்த, ‘பேக்லோ பட்ரசால்’ (paclobutrazol) என்ற ரசாயனப் பொருளைத் தெளிப்போம். இது, மரத்திற்கு எந்தக் கெடுதலும் தருவதில்லை. ஆனால், அதிகளவில் பூத்து, மகரந்தச் சேர்க்கைக்கு வழி வகுக்கும். இதனால், இடைப்பருவத்தில் இயல்பாக, அதிகளவில் மாம்பழங்கள் காய்க்கின்றன.
  • என்னிடம் தற்போது, 40 ஏக்கர் நிலம் உள்ளது. ஒரு விவசாயி குறைந்தது, 10 ஏக்கர் நிலம், நல்ல தண்ணீர் வசதியுடன் வைத்திருந்தால் மட்டுமே, விவசாயத்தை மட்டும் செய்யலாம். அப்படி இல்லையெனில், வேறு உபதொழில் செய்வதே பாதுகாப்பானத

மாங்கன்றுகளை வளர்த்து விற்பனை செய்து தருவதுடன், கலப்பின மாங்கன்றுகள் தேவை என்றால் உருவாக்கியும் தருகிறேன்.தொடர்புக்கு: 09940731212

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *